சுரபத்மனை அழிக்கும் பொருட்டு பார்வதி தேவி சிவபெருமான் தனக்கு கூறியதை பஞ்சபட்சி சாஸ்திரத்தை முருகப்பெருமானிடம் எடுத்துரைத்தார்
ஏனெனில் முருகப்பெருமானால் சுரபத்மனை வதம் செய்வதற்கு கடினமாக இருந்தது.
முருகப்பெருமான் இந்த பஞ்சபட்சி சாஸ்திரத்தை பயன்படுத்தி சுரபத்மனை அழித்தார்.
பின்னர் முருகப்பெருமான் இந்த சாஸ்திரத்தை அகத்தியருக்கு உபதேசித்தார்.
அதன் பின்னர் அகத்தியரால் சித்தர்களுக்கு உபதேசிக்கபட்டது.
பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகாயம் இவை உலகை ஆள்கிறது.
இந்த பூதங்கள் எத்தகைய நாழிகை ஜாமங்களில் செயல்படுகின்றன என்று அறிந்து இவற்றை பஞ்சபட்சியாக மாற்றம் செய்தனர்.
அந்த மாற்றமானது தமிழின் உயிரெழுத்துகளான அ,இ,உ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துகளும் என்ன வடிவத்தில் உள்ளதே அதற்கான பறவையை வடிவமைத்தனர்
.அ என்ற தோற்றம் போல் வல்லூறு இருக்கும்.
இ தோற்றத்தில் இரு புள்ளிகள் அமைத்தால் ஆந்தை வடிவம்.
உ என்ற எழுத்து காக்கை போன்று தோற்றம் உடையது.
எ என்கிற எழுத்து ஒரு கோழியை உட்கார வைத்தாள் அதன் வடிவம்.
ஒ என்கிற எழுத்து மயிலின் அமைப்பு இதனால்தான் காகபுஜண்டர் பஞ்ச பூதங்களை பஞ்சபட்சியாக
தமிழ் எழுத்துகளை வைத்து மாற்றம் செய்துவிட்டார்.
பஞ்சபட்சி சாஸ்திரமும் முருகனும்
By Staff
Published: