ஓம் என்ற மந்திரம்தான் பிரணவ மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. எந்த ஒரு மந்திரத்தின் பின்னாலும் ஓம் என்ற வார்த்தையை சேர்த்துக்கொண்டுதான் மந்திரங்கள் உச்சரிக்கப்படுகிறது.
பிரணவ மந்திரமானது உலகம் தோன்றுவதற்கு முன்பே எங்கும் நிரம்பியிருந்ததாக சொல்லப்படுகிறது.
ஓம் என்ற மந்திரத்தில் அ என்ற வார்த்தை சிவனையும் உ என்பது உமையாள் பார்வதி தேவியையும் குறிப்பதாகும்.அ + உ+ ம் என்பதன் இணைப்பே ஓம் ஆகும்
கீதையை எழுதிய கண்ணன் பிரணவ மந்திரம் குறித்து கூறும்போது எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான் என கண்ணன் சொல்கிறார்.