நாடி ஜோதிடத்தை பற்றி ஓரளவு அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தற்போது நாடி ஜோதிடம் எப்படி பார்க்கப்படுகிறது என்று பார்ப்போமா…
பொதுவாக நாடி ஜோதிடம் நமது கையின் ரேகையை வைத்து பார்க்கப்படுகிறது. அதாவது ஆண்களுக்கு அவர்களின் வலது கை பெருவிரல் ரேகையை வைத்தும், பெண்களுக்கு அவர்களின் இடது கை பெருவிரல் ரேகையை வைத்தும் பார்க்கப்படுகிறது. ஒரு காகிதத்தில் வைக்கப்பட்ட ஒருவரின் கை ரேகையை வைத்து அதற்கான ஓலைச்சுவடியை தேடி எடுத்து வருவர் ஜோதிடர்.
அப்படி எடுத்து வரும் ஓலைச்சுவடி அவர்களுக்கானது தான என கண்டறிய நாடி ஜோதிடர் சில கேள்விகளை ஜோதிடம் பார்க்க வருபவரிடம் கேட்பர். அப்படி கேட்கும் கேள்விகளுக்கு நாம் வாழ்க்கையில் நடப்பனவற்றை கூற வேண்டிய அவசியம் இல்லை.
அதாவது நம்முடைய பெயரை கூட கூற வேண்டாம். அப்படி எப்படி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுவது என்றால் ஜோதிடர் கேட்கும் கேள்விகளுக்கு ஆம், இல்லை என்று மட்டும் கூறினால் போதும்.
இதன் மூலம் நாடி ஜோதிடர்கள் தம்மை நாடி வருபவர்களுக்கு இந்த ஓலையை பார்த்து அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கூறுகின்றனர். இவர்கள் கூறுவது உண்மையாகவே இருந்தாலும், இம்முறை ஜோதிடம் ஒரு சிலரால் மட்டுமே நம்பப்படுகிறது.