நாடி ஜோதிடம் என்பது  எந்த அளவிற்கு உண்மை…..

நாடி ஜோதிடம் பற்றி நேற்று கூறியிருந்தேன். இருந்தாலும் பலருக்கும் ஒரு சந்தேகம் எழுந்திருக்கும். அது என்னவென்றால் நாடி ஜோதிடம் உண்மையென்றால் இன்றைய கால கட்டங்களில் ஏன் அவ்வளவாக இந்த முறை ஜோதிடம் பலராலும் பார்க்கப்படுவதில்லை.…

7800df1967f6d7dba4b1d536ad93ef9b

நாடி ஜோதிடம் பற்றி நேற்று கூறியிருந்தேன். இருந்தாலும் பலருக்கும் ஒரு சந்தேகம் எழுந்திருக்கும். அது என்னவென்றால் நாடி ஜோதிடம் உண்மையென்றால் இன்றைய கால கட்டங்களில் ஏன் அவ்வளவாக இந்த முறை ஜோதிடம் பலராலும் பார்க்கப்படுவதில்லை.

மேலும் கை ரேகையை வைத்து ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட அந்த ஜோதிடக் குறிப்பை அறிய முடியுமா.. அப்படி அறிய முடியும் என்றால் அது எத்தனை சதவிகிதம் உண்மைத் தன்மையாக இருக்கும். இந்த சுவடியில் எழுதப்பட்ட ஜோதிட குறிப்பை அனைவராலும் படிக்க முடியுமா?… இப்படி எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுந்திருக்கும்.

இந்த கேள்விக்கு பதில்கள் என்று உறுதியாக எதையும் கூற முடியாது. ஏனெனில் இந்த நாடி ஜோதிடம் பயிலும் போதே நாடி ஜோதிட தொழில் முறையை ரகசியமாக வைத்துள்ளனர். மேலும் இந்த ஓலைச்சுவடியில் எழுதப்பட்டதை படிப்பதற்கென்றே தனியாக கல்வி பயின்று இருப்பார்கள்.

மேலும் இந்த நாடி ஜோதிட முறையை பயிலும் போதே அகத்தியர்கள், சித்தர்கள் மீது தொழில் ரகசியத்தை கூற மாட்டேன் என்று சத்தியம் செய்வார்களாம். இதனால் தான் அதன் உண்மையை நம்மால் அறிய முடியவில்லை.

எனினும் இந்த வகையான நாடி ஜோதிடமும் உண்மைதான் என்று சொல்கின்றனர் நம்முள் பலர். அதுவும் நம் வாழ்கையில் நடந்து முடிந்தவற்றையும், இனி நடக்க இருப்பதையும் இம்முறை மூலம் கூட நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன