நாடி ஜோதிடத்தில் காண்டங்கள் என்பது என்ன?

நாடி ஜோதிடம் பற்றி ஓரளவு புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மேலும் இந்த நாடி ஜோதிடத்தில் காண்டங்கள் என்பவை என்ன என்பது பற்றி இன்று பார்ப்போமா… நாடி ஜோதிடமே காண்டங்களை வைத்து தான் பார்க்கப்படுகிறது.…

2e0b34b717959c1abfe8bd4917a736a6

நாடி ஜோதிடம் பற்றி ஓரளவு புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மேலும் இந்த நாடி ஜோதிடத்தில் காண்டங்கள் என்பவை என்ன என்பது பற்றி இன்று பார்ப்போமா…

நாடி ஜோதிடமே காண்டங்களை வைத்து தான் பார்க்கப்படுகிறது. அதாவது காண்டங்கள் என்பது நாடி ஜோதிடத்தில் உள்ள உட்பிரிவுகள் ஆகும். இந்த நாடி ஜோதிடத்தில் மொத்தமாக பன்னிரண்டு உட்பிரிவுகள் அல்லது காண்டங்கள் உள்ளது.

இந்த பன்னிரண்டு காண்டங்களில் முதல் காண்டம் பொது காண்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காண்டங்களின் மூலம் நம் வாழ்க்கையின் எதிர்கால பலன்களை அறியலாம்.

ஆனால் முதல் காண்டமான பொது காண்டத்தை பார்த்தால் தான் மீதி உள்ள பதினோரு காண்டங்கள் என்ன சொல்கிறது என்று நம்மால் அறிய இயலும். இந்த பொது காண்டத்தில் ஒருவரது பெயர், அவர் குடும்ப வாழ்க்கை எப்படி உள்ளது, மேலும் அவருடைய தொழில் ஆகியவற்றை அறியலாம்.

அதாவது ஒருவரின் பொதுவான வாழ்க்கை செய்திகளை அறியலாம். இதற்கு பின் வரும் ஒவ்வொரு காண்டங்களும் ஒவ்வொரு பண்பு நலன்களை கூறக் கூடியவை.

ஞான காண்டம், எல்லைக் காண்டம், பிரசன்ன காண்டம், சாந்தி காண்டம், துல்லிய காண்டம் போன்றவை காண்டங்களின் சில வகைகள். இது போன்று இன்னும் சில வகையான காண்டங்களும் உள்ளன.

இந்த காண்டங்களே நாடி ஜோதிடத்திற்கு அமைந்த மிகச் சிறப்பான ஒன்று என்று கூறுகின்றனர் நாடி ஜோதிட வல்லுநர்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன