நாம் எங்காவது வெளியில் செல்லும் போது ரோட்டின் ஓரங்களில் பல சாமியார்களை பார்த்திருப்போம். அவர்களில் பலர் சில ஓலைச்சுவடிகளை வைத்திருப்பதை காணலாம். அல்லது சிலர் ஜோதிட நிலையமே வைத்து அதில் ஓலைச்சுவடிகளை வைத்து ஜோதிடம் பார்ப்பதை கவனித்திருப்போம்.
இதெல்லாம் பார்த்து நம்முள் சிலர் இதெல்லாம் உண்மை இல்லை. இவர்கள் எல்லாம் பொய்யாக ஜோதிடம் சொல்பவர்கள் என்று நினைத்திருப்போம். ஆனால், உண்மையில் அவர்கள் அனைவரும் பொய்யானவர்கள் என்று நினைப்பது தவறு. அவர்களுள் உண்மையானர்களாகவும் சிலர் உள்ளனர்.
இப்படி ஓலைச்சுவடி வைத்து ஜோதிடம் சொல்வதை நாடி ஜோதிடம் என்றும் கூறுவார்கள். இதற்கு ஏன் நாடி ஜோதிடம் என்று பெயர் வந்தது என்றால் ஜோதிடர்களை நாடி வந்து பார்க்க கூடியதால் இதற்கு நாடி ஜோதிடம் என்று பெயர் ஏற்பட்டது. இதில் பார்க்கப்படும் ஓலைச்சுவடி பழங்காலத்தில் முனிவர்கள் பலரால் ஆராய்ந்து எழுதப்பட்டது ஆகும்.
இதில் ஒருவரது கை பெருவிரல் ரேகையை வைத்து ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து ஜோதிடம் கூறுவார்கள். இந்த முறையில் கூறக்கூடிய ஜோதிடமும் உண்மையாகத் தான் இருக்கும். தற்போதைய இந்த நவீன காலங்களில் கணினி ஜோதிடம் வந்த பிறகு இது போன்ற பல வகையான ஜோதிட முறைகள் அழிந்தே போய் விட்டன.