மோட்ச தீபம் ஏற்றும் முறைகள்

By Staff

Published:

6cc93779ba08c7756d7c17909b154af7

ஒருவர் இறந்து விட்டால் அவர்களின் உறவினர்களும் ரத்த உறவுகளும் அவருக்காக மோட்ச தீபம் ஏற்றி வேண்டிக்கொள்வார்கள். மோட்ச தீபம் என்பது புகழ்பெற்ற சிவன்கோவில்களில் சென்று ஏற்றலாம். பித்ரு பரிகார ஸ்தலமான ராமேஸ்வரம் போன்றவற்றில் ஏற்றலாம் அப்படி ஏற்றினால் சிறப்பு. எல்லோராலும் ராமேஸ்வரம் செல்ல முடியாதல்லவா அதனால் அவரவர் இருக்கும் ஊரில் உள்ள சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயத்திலேயே ஏற்றலாம்.

விளக்குகள் (மண்), தூய பருத்தித் துணி, வாழை இலை, பச்சைக் கற்பூரம், சீரகம், பருத்திக்கொட்டை, கல் உப்பு, மிளகு, நவ தானியங்கள், கோதுமை, நெல் (அவிக்காதது), முழு துவரை, முழு பச்சைப் பயறு, கொண்டைக் கடலை, முழு வெள்ளை மொச்சை, கருப்பு எள், முழு கொள்ளு, முழு கறுப்பு உளுந்து ஆகிய  பொருள்களைக் கொண்டு மோட்ச தீபம் ஏற்றப்பட வேண்டும். 

பருத்தித் துணியில் மேற்கண்ட பொருள்களை மூட்டையாகக் கட்டி, அதன் முடிச்சை ஒரு திரிபோல் செய்து, விளக்கிலுள்ள எண்ணெயில் போட வேண்டும். பிறகு ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நன்கு உயர்ந்த இடத்தில் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.

வாழை இலையை விரித்து வைத்து அதன் மேல்  நவதானியங்களை பரப்பி  அதன் மீது மோட்ச தீபம் ஏற்ற வேண்டும் என்பது விதி. அப்படி ஏற்றும்போது  மோட்ச தீபத்தை , மேல்நோக்கி எரிய விட வேண்டும். அதற்குத்தான் திரி மூட்டையாகக் கட்டப்பட்டு விளக்கின் நடுவில் வைக்கப்பட்டு எரிக்கப்படுகிறது. 

இந்தத் தீபத் தோற்றம் சிவலிங்கம்போல இருக்கும். விளக்கு ஏற்றியவுடன் பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். 

மோட்ச தீபம் மற்றவருக்கு மட்டுமல்ல நாம் வாழும் நாள்களில் நமக்காகக்கூட ஏற்றிக்கொள்ளலாம் என்று ஞானநூல்கள் தெரிவிக்கின்றன. 

Leave a Comment