மிதுனம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!

மிதுன ராசியினைப் பொறுத்தவரை துன்பத்தையும், இன்பமற்ற நிலையினையும் கடந்த 5 ஆண்டுகளாக வாழ்க்கையில் கொண்டிருந்த உங்களுக்கு மங்களகரமான விஷயங்கள் நடக்கப் பெறும். ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்; அஷ்டம சனியும், 10 ஆம் இடத்தில்…

mithunam

மிதுன ராசியினைப் பொறுத்தவரை துன்பத்தையும், இன்பமற்ற நிலையினையும் கடந்த 5 ஆண்டுகளாக வாழ்க்கையில் கொண்டிருந்த உங்களுக்கு மங்களகரமான விஷயங்கள் நடக்கப் பெறும்.

ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்; அஷ்டம சனியும், 10 ஆம் இடத்தில் இருந்து குரு பகவானும் விலகிவிட தொட்டது துலங்கும் காலமாக இருக்கும். 11 ஆம் இடத்தில் ராகு பகவானுடன் குரு இணையவுள்ளார். திருமண காரியங்களைப் பொறுத்தவரை இதுவரை தள்ளிப் போன திருமணங்கள் விறுவிறுவென நடந்தேறும்.

குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறும். குல தெய்வ வழிபாடு உங்களுக்குச் சகலவிதமான ஏற்றங்களையும் கொடுக்கும் மாதமாக இருக்கும்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஏற்ற வேலையானது கிடைக்கப் பெறும். தொழில்ரீதியாக பணப் புழக்கம் அதிகரிக்கும். இதுநாள் வரை சந்தித்த பண நெருக்கடியில் இருந்து வெளிவருவீர்கள். பழைய கடன்களை அடைத்து மகிழ்வீர்கள்.

எந்தவொரு விஷயத்திலும் பயப்படாமல் தைரியத்துடன் செயல்படுவீர்கள்; குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை விவாகரத்து வரை சென்ற கணவன்- மனைவி ஒன்று சேர்வர்.

பிரிந்து போன நண்பர்கள் – உறவினர்கள் உங்களின் அன்பினைப் புரிந்து கொள்வார்கள். தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை, பூர்விகச் சொத்துகள் ரீதியாக பிரச்சினைகள் ஏற்படும்.