மிதுனம் ராகு- கேது பெயர்ச்சி ராசி பலன் 2023!

ராகு- கேது பெயர்ச்சியானது அக்டோபர் 30 ஆம் தேதி துவங்குகின்றது. மிதுன ராசி அன்பர்களே! சனி பகவான் 8 ஆம் இடத்தில் இருப்பதால் ராகு பகவானால் சரியாகச் செயல்பட முடியாமல் இருந்து வந்தார்.

ராகு பகவான் பெயர்ச்சிக்குப் பின்னர் 10 ஆம் இடத்தில் இட அமர்வு செய்கிறார். தொழில் ரீதியாக இதுவரை அபிவிருத்தி சார்ந்த விஷயங்களைத் தள்ளிப்போட்டு வந்தநிலையில் தற்போது பெரிய அளவில் முதலீடு செய்து அபிவிருத்தி செய்வீர்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மாணவர்கள் கல்வி சார்ந்து பெற்றோருக்கு பெரும் புகழினைத் தேடித் தருவர், வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இதுவரை வேலை கிடைக்காமல் அல்லல்பட்டவர்களுக்கும் அவர்களின் திறமைக்கேற்ற வேலை கிடைக்கப் பெறும்.

வேலை சார்ந்த இடமாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு என அனைத்தும் கிடைக்கப் பெறும். தொழில், வேலைவாய்ப்பில் இருந்த தடைகள் அனைத்தும் சரியாகும். ராகு பகவான் பல வகைகளிலும் உங்களுக்குப் பெரும் வாய்ப்புகளை வாரிக் கொடுக்கின்றார்.

அமைதியாக இருந்துவந்த நீங்கள் இனி மிகவும் விவேகத்துடனும், உத்வேகத்துடனும் செயல்படுவீர்கள். உங்களின் ஆற்றலைக் கண்டு நீங்கள் அதிசயத்துப் போவீர்கள்.

பொருளாதாரரீதியாக தனவரவு அதிகரிக்கும். வீடு, மனை போன்ற அசையாச் சொத்துகளில் முதலீடு செய்வீர்கள். இல்லத்தரசிகள் தங்கநகை சார்ந்த முதலீடுகளைச் செய்து மகிழ்வார்கள். யோகம் நிறைந்த காலகட்டமாக இது உங்களுக்கு இருக்கும்.

ஓயாது வேலை செய்பவராக ராகு பகவான் மாறுவார். துலாம் வீட்டில் இருந்து கன்னி வீட்டிற்கு கேது பகவான் இடப் பெயர்ச்சி செய்கிறார். வெளியூர்ப் பயணங்கள் உங்களுக்குப் பெரும் அலைச்சலைக் கொடுப்பதாய் இருக்கும். மனதளவில் அமைதி இல்லாமல் காணப்படுவீர்கள்.

மௌன விரதத்தினை அவ்வப்போது கடைபிடித்து வந்தால் கேதுவால் ஏற்படும் தொந்தரவுகள் குறையும். மேலும் உணவு சார்ந்த விஷயங்களில் கவனமாக இருந்தால் உடல் தொந்தரவுகளில் இருந்து தப்பிக்கலாம்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

யோகக்காரகன் ராகு உங்களுக்கு யோகங்களை அள்ளிக் கொடுத்து உங்களை மகிழ்விப்பார். கேது மிதமான தோஷத்தையும், மிதமான சோர்வையும், மன உளைச்சலையும் கொடுப்பார்.