மிதுனம் ஆடி மாத ராசி பலன் 2022!

பல வருட காலமாக பட்டுவந்த கஷ்டங்களுக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும். செவ்வாய் ராகுவுடன் இணைந்துள்ளதால் சுய தொழில் செய்வோருக்கு மிகச் சிறந்த காலகட்டமாக இருக்கும். சரியான பணவரவு இல்லாததால் சூழ்நிலையினைச் சமாளிக்க கடன் வாங்கும்…

Mithunam

பல வருட காலமாக பட்டுவந்த கஷ்டங்களுக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும். செவ்வாய் ராகுவுடன் இணைந்துள்ளதால் சுய தொழில் செய்வோருக்கு மிகச் சிறந்த காலகட்டமாக இருக்கும்.

சரியான பணவரவு இல்லாததால் சூழ்நிலையினைச் சமாளிக்க கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். எண்ணங்களிலும் எடுக்கும் முடிவுகளிலும் தெளிவு பெறுவீர்கள்.

முடியும் நிலையில் இருக்கும் விஷயங்களும் கை நழுவிப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் எண்ணிய எண்ணம் கைகூடாததால் மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வாக்கு ஸ்தானத்தில் கூடுதல் கவனம் தேவை, இல்லையேல் அவப் பெயருக்கு வித்திடும். கேது குரு ஸ்தானத்தில் இருப்பதால் சூழ்நிலைகளை மிகவும் கவனமாகக் கையாண்டால் வளர்ச்சிக்கு அடிகோலவும் வாய்ப்புகள் உண்டு.

வேலைபார்க்கும் இடங்களிலும், உயர் அதிகாரிகளிடம் சுணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

திருமணம் சார்ந்த விஷயங்களில் இதுவரை தள்ளிப் போனவர்களுக்கும் திருமணமானது பேச்சுவார்த்தை அளவிற்குப் போகும். உடன்பிறப்புகளுடன் இருந்த மனக் கசப்புகள் சரியாகும்.

பூர்விக சொத்துகள் தொடர்பான வழக்குகளில் வெற்றி காண்பீர்கள். கல்வி ரீதியாக குழந்தைகள் மந்தநிலையிலேயே காணப்படுவர். கடன் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

முருகப் பெருமான மற்றும் யோக நரசிம்மர் கோவிலுக்குச் சென்று வருதல் நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன