மீனம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள்.. இனி ராஜயோகம் தான்!

By Staff

Published:

மே மாதம் ஒன்றாம் தேதி அதாவது சித்திரை 18 ஆம் தேதி மாலை 5:20 மணி அளவில் குரு பெயர்ச்சி நடக்கிறது. இதன் மூலம் மேஷ ராசியில் இருந்து குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த குரு பெயர்ச்சியால் மீனம் ராசிக்கான பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மீனம் ராசிக்கு ராசி அதிபதியாகவும் பத்தாம் இடத்திற்கு அதிபதியாகவும் இருப்பவர் குரு பகவான். இவ்வளவு காலம் மீனம் ராசியின் இரண்டாம் இடத்தில் குரு இருந்தார். இதனால் உறவினர்கள் வருகை, சுப செலவுகள், முதலீடுகளால் லாபம் என பல நன்மைகள் ஏற்பட்டிருக்கலாம்

இந்நிலையில் குரு பெயர்ச்சி ஆகி மூன்றாம் இடத்திற்கு செல்கிறார். ராசி அதிபதி மூன்றாம் இடத்திற்கு வருவதால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உயரும். சுப செலவுகள் அதிகரிக்கும்.

அதேபோன்று 10-ஆம் இடத்திற்கு அதிபதியான குரு மூன்றாம் இடத்திற்கு வருவதால் உடல் சோர்வு மாறும். மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதிலிருந்து விடுபடுவீர்கள். உழைப்பிற்கு ஏற்றபடி ஊதியம் பன்மடங்காகும். குரு தான் இருக்கும் இடத்திற்கு ஏற்றார் போல் பலன்களை கொடுத்தாலும் அவரது பார்வை எப்போதும் நல்லதாகவே அமையும்.

அவ்வகையில் குரு பகவானின் நேர் பார்வை மீனம் ராசிக்கு 9ஆம் இடத்தை பார்க்கும் போது பதவி உயர்வு, உயர் அதிகாரிகளிடம் நற்பெயர், ஆன்மீக யாத்திரை செல்வதற்கான வாய்ப்பு, வெளிநாட்டிற்கு செல்லும் யோகம் என பல நன்மைகள் நடக்கும். அதேபோன்று குரு பகவானின் ஐந்தாம் பார்வை மீனம் ராசி ஏழாம் இடத்தை பார்க்கும்போது வெகு நாளாக திருமணமாகாதவர்களுக்கும் திருமணம் நடந்து முடியும்.

வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதோடு குரு பகவானின் ஒன்பதாவது பார்வை மீனம் ராசியின் 11ஆம் இடத்தை பார்க்கும் போது எடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி, விலை உயர்ந்த வாகனங்கள் வாங்குவது, ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வது என ராஜயோகமான பலன்கள் கிடைக்கும்.

மேலும் கூடுதல் பலன்களைப் பெற வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபாடு செய்வது சிறப்பு.