சென்னை:
மார்கழி மாதத்தில் சூரியன் தனுசு ராசியில் பயணம் செய்வதால் தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிறது. குருவின் வீட்டில் சூரியன் பயணம் செய்யும் இந்த மாதத்தில் குரு ரிஷப ராசியிலும், செவ்வாய் கடக ராசியிலும் புதன் விருச்சிக ராசியிலும் சுக்கிரன் மகர ராசியிலும் சனி கும்ப ராசியிலும் ராகு மீன ராசியிலும் கேது கன்னி ராசியிலும் பயணம் செய்கின்றன. இந்த கிரகங்களின் பயணத்தால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களில் யாருக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் என்று பார்க்கலாம்.
தனுசு
ராசிக்கு 12ஆம் வீட்டில் இருந்த சூரியன் ராசிக்குள் பயணம் செய்வதால் கோபத்தை தவிருங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. காரமான உணவுகளை தவிர்க்கவும்,குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிர்த்து விட்டுக்கொடுத்து செல்வது மகிழ்ச்சியை அதிகரிக்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கும். வேலையில் சுமை இருந்தாலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். இந்த மாதம் குருபகவானை வியாழக்கிழமை தரிசனம் செய்வதால் மன அமைதி அதிகரிக்கும்.
மகரம்
கிரகங்கள் சாதகமாக பயணம் செய்வதால் புதிய பதவி பொறுப்புகள் தேடி வரும். சூரியன் 12ஆம் வீட்டில் பயணம் செய்கிறார் வேலை செய்யும் இடத்தில் பளு அதிகரிக்கும். உறக்க பிரச்சினை ஏற்படும். குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள் வரும். குருவின் பார்வை கிடைப்பதால் முகத்தில் பொலிவு கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி கூடும். தை மாதத்தில் புது வீடு குடி செல்வதற்கான முயற்சிகளை இந்த மாதத்தில் தொடங்கலாம். கால பைரவரை செவ்வாய்கிழமை வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.
கும்பம்
லாப ஸ்தானத்தில் சூரியன் பயணம் செய்வதால் மார்கழி மாதம் மகிழ்ச்சியை தரக்கூடிய மாதமாக அமையப்போகிறது. பெரிய பதவிகள் பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். பண வருமானம் அதிகரிக்கும் பழைய கடன்களை அடைப்பீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். புது வீடு வாங்குவீர்கள். வியாபாரம், தொழிலில் லாபம் கிடைக்கும். புதிய அதிகார பதவிகள் தேடி வரும். அரசு வேலைக்கு தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். ஞாயிறுகிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வணங்குவது நன்மையை தரும்.
மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே.. சூரியன் இந்த மாதத்தில் உங்கள் ராசிக்கு 10ஆம் வீட்டில் பயணம் செய்வதால் செல்வாக்கு அதிகரிக்கம். புது வேலை கிடைக்கம். வெளிநாடு செல்வதற்கான யோகம் தேடும். புதன், சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பண வருமானம் தேடி வரும். ராசிக்கும் பயணம் செய்யும் ராகுவால் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. விரைய சனி நடைபெறுவதால் பண விசயத்தில் கவனம் தேவை. ஆன்மீக பயணம் மன அமைதியை தரும். வெற்றிகளை தரும் மாதமாக மார்கழி மாதம் அமைந்துள்ளது. மாதம் முழுவதும் ராகு காலத்தில் துர்க்கையை வணங்கலாம் நன்மைகள் நடைபெறும்.