மார்கழி மாத ராசி பலன் 2024: மகத்துவம் நிறைந்த மார்கழி மாதத்தில் திடீர் ஜாக்பாட் யாருக்கு கிடைக்கும்

மார்கழி இன்னும் சில நாட்களில் பிறக்கப்போகிறது. மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள். தனுசு ராசிக்கு அதிபதி குருபகவான். அதாவது, குரு பகவான் வீட்டில்…

Margazhi matha rasi Palan 1

மார்கழி இன்னும் சில நாட்களில் பிறக்கப்போகிறது. மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள். தனுசு ராசிக்கு அதிபதி குருபகவான். அதாவது, குரு பகவான் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது. பக்தி சிந்தனைக்கு உரிய உயரிய மாதமான பெருமை மிகு மார்கழி மாத ராசி பலனை அறிந்து கொள்வோம்.

மேஷம்

சூரியன் ஒன்பதாமிடத்தில் பயணம் செய்யப்போவதால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை வியாபாரம் விருத்தியாகும். வருமானம் பல வழிகளிலும் அதிகரிக்கும்.

ரிஷபம்

சூரியன் எட்டாமிடத்தில் பயணம் செய்யப்போவதால் தொழிலில் டென்சன் உண்டாகும் அப்பாவிடம் மனஸ்தாபம் உண்டாகும் கவனம் தேவை. கூட்டுத் தொழில் சிறப்படையும் வியாபாரம் விருத்தியாகும் தாய் மாமனால் நன்மை உண்டாகும்

மிதுனம்

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசுமுறை பயணம் உண்டாகும் அரசாங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்த தொழில் சிறப்படையும் வாக்கு வன்மை அதிகரிக்கும். திடீரென்று பண வரவு உண்டாகும்.

கடகம்

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சச்சரவு உண்டாகும் தொழிலிலும் பிரச்சினை உண்டாகும் . குடும்பத்தில் சச்சரவைத் தவிர்க்கவும், மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஐந்தாமிடத்தில் பயணம் செய்யப்போவதால் அரசாங்க வேலைக்கான போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள்.

கன்னி

சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் அரசு ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் . கடவுள் பக்தி அதிகரிக்கும். உடல் நிலை பாதிப்பில் இருந்து தப்பிக்க புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

துலாம்

சூரியன் மூன்றாமிடத்தில் பயணம் செய்யப்போகிறார். அரசு ஊழியர்களுக்கு பணியிடமாற்றம் உண்டாகும். மன தைரியம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சம்பளம் அதிகரிக்கும் அப்பாவின் மூலம் பண வரவு உண்டாகும். குடும்பத்தில் தேவையற்றா வீண் பேச்சை தவிர்க்கவும்.

தனுசு

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அப்பா சம்பாதித்த சொத்து கிடைக்கும் உத்தியோக நிலை சிறப்படையும். குழந்தைகளுக்கு மருத்துவச் செலவு உண்டாகும், கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

மகரம்

சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வேலைக்காக வெளியூர் செல்வீர்கள் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும், வெளிநாடு செல்ல முயற்சிகள் செய்யலாம். மனதில் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

கும்பம்

சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும் செயல்கள் சிறப்படையும். அதிகாரப் பதவி கிடைக்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் உண்டாகும். கோயில்களுக்காக அதிக செலவுகள் செய்வீர்கள். சிவ ஆலயங்களுக்கு மாலை நேரங்களில் சென்று தரிசனம் செய்ய நன்மைகள் அதிகம் நடைபெறும்.

மீனம்

சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் சிறப்படையும் வேலைப்பளு அதிகரிக்கும். கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும், தொழிலில் லாபம் அதிகரிக்கும். இந்த மாதம் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி இலையால் அர்ச்சனை செய்ய நன்மைகள் அதிகரிக்கும்,