நாம் படித்தவராக இருந்தாலும் சரி, படிக்காதவராக இருந்தாலும் சரி ஜோதிட பலன்களை தவறாமல் பார்ப்போம். ஏனெனில் நம் வாழ்க்கையில் ஜோதிடம் மிகவும் இன்றியமையாதது.
ஏன் எனில் நம் பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்வில் நடைபெறும் அனைத்திற்கும் காரணம் ஜோதிடத்தில் கூறப்படும் நம் ஜாதக கட்டங்கள். இந்த ஜோதிடத்தை பற்றி பழங்காலத்திலேயே சிலர் நூல்களை எழுதியுள்ளனர். இந்நூல்களை அடிப்படையாக கொண்டு தான் தற்போது உள்ள நவீன உலகில் ஜாதகம் கூறப்படுகிறது.
தற்போது உள்ள கால கட்டங்களில் அனைத்து ஜோதிடர்களும் ஓரளவு படித்தவராகத் தான் இருப்பார்கள். இந்த படித்த ஜோதிடர்கள் அனைவரும் பலதீபிகை என்னும் நூலை கண்டிப்பாக அறிந்திருப்பார்கள். இந்த நூலை மந்தேஸ்வரர் என்பவர் எழுதியுள்ளார்.
வராகமிகிரரின் பிருகஜ் ஜாதகத்தில் கூறப்பட்ட பல யோகங்கள் பற்றி இவரும் கூறியுள்ளார்.
அவை என்னென்னவெனில் மகாபாக்ய யோகம், கேசரி யோகம், அமலா யோகம், லட்சுமி யோகம், புஸ்கல யோகம், வசுமத் யோகம், ஸ்ரீ கண்ட யோகம், கௌரி யோகம், விருஞ்சி யோகம், ஸ்ரீநாத யோகம், அகண்ட சாம்ராஜ்ய யோகம் இது போன்ற பல யோகங்கள் பற்றி நூலில் கூறியுள்ளார் மந்தேஸ்வரர்.
இவை அனைத்தும் நம் ஜாதக பலனை கூறக்கூடியவை. இந்த யோகங்கள் ஒவ்வொன்றையும் பின்வரும் நாட்களில் பார்க்கலாம்.