கும்பம் வைகாசி மாத ராசி பலன் 2024!

கும்ப ராசி அன்பர்களே வைகாசி மாதத்தினைப் பொறுத்தவரை விஜயத்தைக் கொடுக்கும் இடமான 6 ஆம் இடத்தில் சூர்ய பகவான் இட அமைவு செய்துள்ளார். கோர்ட் வழக்கு பல ஆண்டுகளாகச் சென்ற நிலையில் தற்போது அதற்குத்…

kumbam

கும்ப ராசி அன்பர்களே வைகாசி மாதத்தினைப் பொறுத்தவரை விஜயத்தைக் கொடுக்கும் இடமான 6 ஆம் இடத்தில் சூர்ய பகவான் இட அமைவு செய்துள்ளார்.

கோர்ட் வழக்கு பல ஆண்டுகளாகச் சென்ற நிலையில் தற்போது அதற்குத் தீர்வு கிடைக்கும் காலகட்டமாக இது இருக்கும். மேலும் வாங்கிய பழைய கடனை அடைக்க முடியாமல் பல ஆண்டுகளாக வட்டி மட்டுமே கட்டி வந்து இருப்பீர்கள்.

தற்போது அதில் இருந்து மீள்வீர்கள். அன்புத் தொல்லையால் தேவையற்ற சிறு சிறு பிரச்சினைகள் வரும். மூன்றாம் நபர்களிடம் கவனமாக இருத்தல் வேண்டும்.

மேலும் கணவனின் உடல் நலனில் சிறு சிறு உடல் தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும். உணவுக் குழாய், செரிமான மண்டலம் போன்ற உடல் உறுப்புகளில் பிரச்சினைகள் ஏற்படும்.

அரசு வேலைக்காகப் பல ஆண்டுகளாக முயற்சி செய்துவந்த பலருக்கும் தற்போது வேலை கிடைக்கப் பெறும். தொழில் செய்து வருவோருக்கு இது லாபத்தினைக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர்.

தொழில்ரீதியாக வாங்கிய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். பிரச்சினைகள் இருந்த வீடு மற்றும் மனையினை விற்றுப் பணமாக மாற்றுவீர்கள். மேலும் நீங்கள் விரும்பிய இடத்தில் வீடு, மனை போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள்.

மாணவர்களைப் பொறுத்தவரை யோகம் நிறைந்த காலகட்டமாகும். நினைத்த காரியங்களை நினைத்தது போல் முடிப்பீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கப் பெறும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வரும். பின் அவை தானாகவே சரியாகிவிடும். மனநிம்மதி அதிகரிக்கும். மேலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும்.

சுற்றியுள்ள மக்களின் ஆதரவும், இயற்கையின் ஆதரவும் உங்களுக்கு அதிகமாகவே உள்ளது. யாருடைய பிரச்சினையிலும் தலையிடாதீர்கள். ஜென்மத்தில் சனி பகவான் இருப்பதால் தேவையற்ற பிரச்சினைகளுக்குள் அது உங்களை இழுத்துவிடும்.

காமதேனு வழிபாடு பெரிய அளவில் ஏற்றத்தினைக் கொடுக்கும்.