மே மாதம் ஒன்றாம் தேதி அதாவது சித்திரை 18 ஆம் தேதி மாலை 5:20 மணி அளவில் குரு பெயர்ச்சி நடக்கிறது. இதன் மூலம் மேஷ ராசியில் இருந்து குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த குரு பெயர்ச்சியால் கும்பம் ராசிக்கான பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
கும்ப ராசிக்கு 2 மற்றும் 11ஆம் இடத்திற்கு அதிபதியாக இருப்பவர் குருபகவான். இதனால் எந்த ஒரு செயலையும் எளிதில் முடித்து வெற்றி காண்பவர்களாக கும்ப ராசி அன்பர்கள் இருப்பார்கள். இவ்வளவு காலம் கும்ப ராசிக்கு மூன்றாம் இடத்தில் குரு பகவான் இருந்தார்.
இதனால் சகோதர சகோதரிகளிடம் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு இருக்கும் உறவினர்கள் இடையே பிரிவுகள் ஏற்பட்டிருக்கும். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்பட்டிருக்கும்.இந்நிலையில் குரு பெயர்ச்சியாகி நான்காம் இடத்திற்கு வருகிறார்.
இரண்டாம் இடத்திற்கு அதிபதியான குரு நான்காம் இடத்திற்கு வருவதால் தன வரவுகள் அதிகரிக்கும். கௌரவம் உயரும், ஆரோக்கியம் மேம்படும். அதேபோன்று பதினோராம் இடத்திற்கு அதிபதியான குரு நான்காம் இடத்திற்கு வருவதால் பதவி உயர்வு கிடைக்க பெறும்.
ஊதிய உயர்வு ஏற்படும். எடுக்கும் எந்த முயற்சியிலும் முன்னேற்றம் காணப்படும் புதிதாக இடம் வாங்குவீர்கள். சொந்த வீடு வாங்குவதற்கான யோகம் உள்ளது. குரு பகவான் தான் இருக்கும் இடத்திற்கு ஏற்றார் போல் பலன்களை கொடுத்தாலும். அவரது பார்வை எப்போதும் நல்லதாகவே இருக்கும்.
அவ்வகையில் குரு பகவானின் நேர் பார்வை கும்ப ராசியின் பத்தாம் இடத்தை பார்க்கும் போது தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்கள் மாறி லாபம் அதிகரிக்கும். காரிய தடை தாமதங்கள் விலகும். உறவினர்களிடையே வாக்குவாதத்தால் ஏற்பட்ட விரிசல்கள் மறைந்து சுமூகமான உறவு ஏற்படும்.
சக ஊழியர்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் மாறிவிடும். அதேபோன்று குரு பகவானின் ஐந்தாம் பார்வை கும்ப ராசியின் எட்டாம் இடத்தில் விழும்போது மனசோர்வு மாறிவிடும். உங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் காணாமல் போவார்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் சாதகமான முடிவுக்கு வரும்.
அதோடு குரு பகவானின் ஒன்பதாம் பார்வை கும்ப ராசியின் 12ஆம் இடத்தை பார்க்கும் போது செலவு குறையும், வரவு அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினரிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் மாறிவிடும். கூடுதல் பலன்களைப் பெற சனி மற்றும் புதன்கிழமைகளில் ஐயப்பனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பு.