கன்னி ஆடி மாத ராசி பலன் 2022!

புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பதால் கடந்த கால கசப்புகளில் இருந்து மீள உதவும். சுய தொழில் செய்வோர் இதுவரை தொடர் நஷ்டத்தை சந்தித்திருந்தாலும் இனி பண வரவுகள் ஏற்படும்.

பூர்விக சொத்துகள் ரீதியான பிரச்சினைகள் சுமுகமாகவும் லாபகரமாகவும் முடியும். புதிதாக வீடு, மனை வாங்குவதற்கான முயற்சிகளில் களம் இறங்குவீர்கள். பழைய வீடினைப் புதுப்பிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

புதிதாக வண்டி, வாகனங்கள் வாங்குவது நடக்கப் பெறும். தொழிலை அபிவிருத்தி செய்தல், புதிதாக தொழில் துவங்குதல் என அனைத்திற்கும் புதன் மற்றும் குரு பகவான் கைகொடுப்பார்கள்.

திருமணம் ஆகாமல் தட்டிப் போனவர்களுக்கு மிகச் சிறந்த வரன்கள் கிடைக்கப் பெறும். கணவன்- மனைவி இடையேயான உறவு வலுப்பெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறும்.

வாகனப் பயணங்களில் எச்சரிக்கை அவசியம். உறவினர்களால் குடும்பத்தில் சஞ்சலம் ஏற்படும். உடல் ரீதியாக பெற்றோர் ஆரோக்கியத்துடன் மேம்பட்டு காணப்படுவர்.

கல்வி ரீதியாக குழந்தைகளுக்கு கல்வி வளம் கிடைக்கப் பெறும். குல தெய்வ வழிபாடு செய்து வருவதும், நவகிரக வழிபாடு செய்வதும் நல்லது.