*இங்கிலீஷ் தேதி படி பிறந்த நாள் கொண்டாடுவது தவறு.பிறந்த நட்சத்திர ப்படி வரும் நாளன்று தான் கொண்டாட வேண்டும்.அது தான் நமது மரபு!
*துறவி/பெரியோர் காலில் விழுந்து வணங்கும் போது அவரது கால்களை ஒரு போதும் தொட்டு கும்பிட கூடாது.
கால்கள் அருகில் உள்ள தரையை தொட்டு கும்பிட்டால் போதும்!
*பிறரது காம அவமானங்களை சொல்லி கேலி செய்வதால் நமது அன்றைய புண்ணியத்தை இழந்து விடுகிறோம்!!!
*குல தெய்வம் நமக்கு அமாவாசை/வளர்பிறை பஞ்சமி அன்று தான் வரம் தருகின்றது.
*மாதம் ஒரு நாள் தர்ப்பணம் செய்வது,மாதம் ஒரு முறை குல தெய்வத்தை வழிபடுவது – சித்தர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது இதை மட்டும் தான்!!!
*நமது பண்பாட்டின் படி உணவு,குடிநீர்,பால்,
கல்வி இவைகளை விற்பனை செய்வது மஹா பாவம்!!!
* சீக்கிரமே தூங்கி அதிகாலையில் எழுந்து பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு செய்வது நல்ல பலனை தரும். தற்போதைய நாகரீக காலத்தில் எத்தனை பேர் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவர் என்றால் அதை விரல் விட்டு எண்ணிவிடலாம்.