இன்றைய நிலையில் துன்பங்களால் அவதிப்படுவோர்தான் அதிகம். துன்பங்கள் இல்லாமல் யாரும் இவ்வுலகில் இல்லை எல்லாருமே துன்பத்தை அழிக்க முதலில் வேண்டுவது கடவுளிடம்தான். ஏதாவது ஒரு வழி நமக்கு கிடைக்காதா என்று பலரும் அலைந்து வருகின்றனர். நமது ஹிந்து தர்மத்தில் பலதரப்பட்ட கடவுள்கள் உள்ளனர். நோய் தீர்ப்பவரில் இருந்து, செல்வ செழிப்பை கொடுப்பவர்களில் இருந்து, கல்வி கொடுப்பவர்களில் இருந்து எல்லாவிதமான விசயங்களுக்கும் ஒரு கடவுள் உள்ளனர். இவர்களை புகழ்ந்து போற்றும் மந்திரங்களை புராணங்களில் இருந்தும் ஓலைச்சுவடிகளில் இருந்தும் சான்றோர்களால் எடுத்து கொடுக்கப்படுகிறது.
இந்த மந்திரத்தை இத்தனை முறை சொன்னால் நல்லது நடக்கும் உங்கள் கோரிக்கை நிறைவேறும் என்று தற்போதைய வாட்ஸப் காலமான இந்த காலத்தில் செய்திகள் பரப்பபடுகிறது. குறிப்பிட்ட மந்திரத்தை பார்க்கும் சிலரும் உடனே இந்த மந்திரத்தை சொல்லி பார்ப்போம் என்று தினம் தோறும் சொல்லி வருவார் இருப்பினும் போதிய பலன் இருக்காது.
இறைவனின் மந்திரம் எதுவாக இருந்தாலும் அதை நாம் சொல்லும்போது ஆத்மார்த்தமாக சொல்ல வேண்டும்.
புனித மந்திரமானது தெளிவாக உச்சரிக்கப்பட வேண்டும். . ஒரு எழுத்து மாறினாலும் அல்லது த்வனியில் {சத்தம்} ஏற்றம்,குறைவு இருந்தாலும் பிரதினுகூலம் {எதிர்மறை} பலன்கள் தந்துவிடும்.
நாம் ஜபம் செய்யும்போது நமது உடல், மனம், ஆன்மா, நினைவு முழுவதும் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்தே செயல்பட வேண்டும்.
பெரும்பாலும் நமது வாய் மந்திரத்தை ஜபம் செய்கிறது. ஆனால் நமது மனமோ அதில் ஈடுபாட்டோடு இருப்பதில்லை . இவை இரண்டும் இணைந்தாலும், நமது ஆன்மா {நினைவு முழுவதும்} அதில் விருப்பமில்லாமல் ஒதுங்கிவிடுகிறது. ஆனால் இவை மூன்றும் இணைந்தாலோ மந்திரம் நமது உள்ளத்தின் ஆழமான அடுக்குகளிலிருந்து எழும்புவதை நாம் அறியலாம். அந்தச் சமயத்தில் புனித மந்திரத்தால் ஏற்படும் தெய்வீக அதிர்வுகள் நமது உடலில் ஏற்படுத்தும் அது பேரானந்த நிலையை நமக்குள் தோற்றுவிக்கும். வார்த்தையால் விவரிக்க முடியாத பேரின்ப நிலை நமக்கு கிடைக்கும்.