மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரின் கனவும் புதிய வீடு கட்ட வேண்டும் என்பது தான். பண வசதி படைத்தவர்களுக்கு வேண்டுமானால் புதிய வீடு என்பது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் வங்கிக் கடன் வாங்கி புதிய வீடுகட்டி வாடகைக்குப் பதிலாக லோன் கட்டியே வாழ்க்கையின் பாதி நாட்களைக் கடந்து கொண்டிருப்பவர்கள் இன்னும் கோடான கோடிப் பேர் உள்ளனர். ஆனால் இப்படி கஷ்டப்பட்டு நாம் கட்டும் அல்லது வாங்கும் வீடு சரியான வாஸ்து முறையில் இருந்தால் தான் அந்த வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் தங்கும்.
இல்லாவிடில் எதிர்மறை சிந்தனைகளும், ஆற்றல்களும் உருவாகி குடும்பத்தில் நிலையான நிம்மதியே இருக்காது. அந்த வகையில் நாம் குடிபுகும் வீடு எப்படிப்பட்ட வாஸ்து அடிப்படையில் இருக்க வேண்டும் அதற்கான பலன்கள் என்ன என்பது குறித்துப் பார்ப்போமா?
வாஸ்து சாஸ்திரம் என்பது வீடுகளுக்கு மட்டும் பொருந்தாது. அது வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்திற்கும் பொருந்தக் கூடியது. அதில் வடகிழக்கு மூலை (ஈசன்யா) நீரையும், வடமேற்கு (வாயு) காற்றையும், தென்கிழக்கு (அக்னேயா) நெருப்பு, மற்றும் தென்மேற்கு (நிருதி) பூமி ஆகிய நான்கு கூறுகளையும் குறிக்கும்.
கட்டுமானத்தின் போது வீட்டின் சுவர்களுக்கு அடர் வண்ண நிறங்களைத் தவிர்க்கவும். (கருப்பு மற்றும் சிவப்பு ஆகவே கூடாது). சமையலறையில் மருந்துப் பொருட்களை வைப்பது கூடாது. மேலும் பூஜை அறையில் வெள்ளை நிறம் பூசுவது நன்மை பயக்கும்.
மேலே குறிப்பிட்ட திசைகளில் பிரதான வாசல் கதவினை வடக்கு அல்லது வடகிழக்கு திசையை நோக்கி வைக்க வேண்டும். ஏனெனில் இந்த திசைகள் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரும் என்பது ஐதீகம். அதேபோல் ஜன்னல்கள், துவாரங்கள் மற்றும் பிற திறப்புகளை வைப்பது மிகவும் முக்கியம்.
பசு மாட்டிற்கு இப்படி ஒரு விழாவா? நெகிழச் செய்த திருப்பத்தூரை சேர்ந்த நபர்…
ஒவ்வொரு பொருளும் வைக்க வேண்டிய இடத்திற்கு ஏற்றார் போல் பலன்கள் அமைகின்றன. வாழும் வீட்டில் செம்பருத்தி சேகரிக்கும் பொருளாகப் பீரோ அல்லது பணம் பெட்டகம் உள்ளது. இந்த உபகரணங்களைச் சரியான திசை நோக்கி வைக்கும் பட்சத்தில் வீட்டில் செல்வம் செழிப்படையும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
மேற்குறிப்பிட்ட திசைகளில் தென்மேற்கு பகுதியான குபேர மூலையில் பணம் சார்ந்த பொருட்களை பீரோ, பணப்பை, நகைகள் போன்றவற்றை வைக்கும் போது அவை பெருகும் என்பது நம்பிக்கை. இப்பொருட்கள் வடக்குப் பக்கம் அமைய வேண்டும்.
கழிவு நீர் வடிகால் வட திசையில் அமைக்க வேண்டும். வீடு கட்டும்போது இந்த திசை நோக்கிக் கட்டினால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல் பூஜை அறை வடகிழக்கு திசை நோக்கி அமைக்க வேண்டும். பூஜை அறையைப் பொறுத்த வரை சிவபெருமான், பார்வதி, மகாவிஷ்ணு, லட்சுமி தேவி, விநாகர் போன்ற கடவுள்களின் படங்களை வைத்து வணங்க வேண்டும். இவ்வாறு அமையும் போது ஆரோக்கியம் அதிகரிக்கும், உறவு சிக்கல் தீரும்.
தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரை பச்சைக் கிளிகள் புகைப்படத்தினை வைக்கும் போது தொழில் விருத்தியடையும் என்பது நம்பிக்கை. குப்பைகளை எப்போதும் வடக்குப் பக்கத்தில் சேர்த்து வைக்கக் கூடாது அவ்வாறு செய்யும் பட்சத்தில் சிக்கல்கள் அதிகரிக்குமாம்.
மேற்கண்ட வாஸ்து முறைகளைக் கடைப்பிடித்தால் வீட்டில் மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள்.