மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரிலிருந்து மிக அருகில் உள்ள ஊர் திருக்கடையூர். இங்கு வீற்றிருக்கும் இறைவன், அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன் இங்கு வந்து 60ம் திருமணம் 80ம் திருமணம் செய்து கொண்டால் ஆயுள் இன்னும் அதிகரித்து வயதான தம்பதிகளாக இருந்தாலும் இன்னும் சில நாட்களோ ஆண்டுகளோ நீடுழி வாழ்வர் என்பது நம்பிக்கை.
பெரும்பாலும் நல்ல நிலையில் இருக்கும் மகன்கள் தங்களை வளர்த்து எடுத்து ஆளாக்கி இந்த நிலைக்கு உயர்த்திய தங்கள் தாய் தந்தையருக்கு ஏதாவது செய்ய வேண்டும் தனக்கு திருமணம் செய்து பார்த்த அப்பா அம்மாவுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என தங்கள் தாய் தந்தையருக்கு 60ம் திருமணத்தை ஏற்பாடு செய்கின்றனர்.
ஆணுக்கு 60 வயதாகி விட்டால் இந்த திருமணத்தை செய்யலாம். திருக்கடையூர் கோவிலின் உள்ளே தினமும் பல ஆயிரக்கணக்கான 60ம் திருமணங்கள் நடக்கிறது.
கோவில் உள்ளே முழுவதும் யாகசாலைகளாக இருக்கும் . திருமணங்கள் இங்கு அதிக அளவில் நடக்கிறது. அபிராமி அந்தாதி பாடப்பட்டதும் இத்தலத்திலேயாகும். இத்தலத்தில் இறைவன் சிவபெருமான், மார்க்கண்டேயனின் ஆயுளை எடுக்க வந்த எமனை விரட்டினார் என்பது தொன்நம்பிக்கை.
அதனால் இந்த தலத்திற்கு வந்தால் நீடுழி வாழலாம் என்பது நம்பிக்கை.ஜாதகத்தில் ஆயுள் ரீதியான தோஷம் நீங்க இங்கு செல்லுங்கள்.ஜாதகரீதியாக ஆயுள் தோஷம் உள்ளவர்கள் இங்கு சென்று வணங்கலாம்.