ஏழரை சனி தாக்கத்திலிருந்து விடுபட

single-page-feb-issue-2

தற்போது ஏழரை சனி ஒருவருக்கு நடக்கிறது என்றால் பெரும்பாலும் ஜோதிடர்களிடம் நம் ஜாதகத்தை காட்டினால் ஜோதிடர் திருநள்ளாறு சென்று வாருங்கள் அனைத்தும் சரியாகும் என சொல்லுவார். இல்லை என்றால் தேனிமாவட்டம் குச்சனூரில் இருக்கும் சனீஸ்வரரை சொல்வார்கள். இந்த இரண்டு இடங்களுக்கும் தற்போது அதிக கூட்டம் வருகிறது. இங்கு சனிக்கிழமைகளில் சென்றால் தாங்க முடியாத அளவு கூட்டம் கோவில்களில் அலைமோதுகிறது.

ஸ்வாமி தரிசனமும் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. சனீஸ்வரனுக்கு இக்கோவில்கள் தவிர்த்து இன்னும் சில பரிகார ஸ்தலங்கள் உள்ளன. அங்கும் சென்று நாம் வணங்கி வரலாம். அப்படி ஒரு கோவில்தான் கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகே அமைந்துள்ள திருநாறையூர் என்ற ஸ்தலம் இந்த கோவிலில் ராமநாதர் பர்வதவர்த்தின் காட்சி தருகின்றனர்.

சனீஸ்வரர் மங்கள சனீஸ்வரராக மங்களம் தருபவராக இங்கு உள்ளார். தசரத மஹாராஜா தனக்கு ஏற்பட்ட சனி தோஷத்திற்காக வேண்டி கொண்டாராம் மேற்கு நோக்கியவாறு சனீஸ்வரன் தமது இரு மனைவிகளான மந்தாதேவி,ஜேஷ்டா தேவி மற்றும் இரு மகன்களான மாந்தி,குளிகனுடனும், அருள்பாலித்து வருகின்றனர்.ராமநாதசுவாமி கிழக்கு நோக்கியவாறும்,பர்வத வர்த்தினி தெற்கு நோக்கியும் ஒரே மண்டபத்தில் அருள்பாலித்து வர,மங்கள சனிபகவான் தனது திசையான மேற்கு நோக்கியவாறு அருள்பாலித்து வருகின்றார்.அவரது சன்னதிக்கு எதிராகஅவரது வாகனம் காக்கை,நந்தி போல அமர்ந்திருக்க,அதன் பின்புறத்தில் இரும்பால் ஆன கொடிமரம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

சனீஸ்வரனின் புதல்வனான மாந்தியால் ஜாதகத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் இங்கு குடும்ப சகிதமாக மங்களகரமாக இருக்கும் சனீஸ்வரரை வணங்கி நலம் பெறலாம். சீக்கிரமே இவரை வணங்குவதால் ஏழரை சனி, அஷ்டம சனி, பாத சனி தாக்கங்கள் குறையும்.

எந்த கோவிலிலும் மூலஸ்தானத்திற்கு எதிரே மட்டுமே கொடி மரம் இருக்கும். இங்கு சனீஸ்வரர் சன்னதி நேர் எதிரிலும் கொடி மரம் உள்ளது சனீஸ்வரன் சன்னதிக்காக மட்டும் உள்ளது சிறப்பு.