தீபாவளி பண்டிகை நாளை 4ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி முடிந்த உடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி விடும். கந்த சஷ்டிக்கு 6 நாட்களும் விரதம் இருந்து வழிபடுவோர் உண்டு.
கடைசி நாளான சூரசம்ஹாரத்தன்று மட்டும் முருகப்பெருமானை நினைத்து விரதம் வழிபடுவோரும் உண்டு.
தொடர் சுபமுகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வருகிறது. குருப்பெயர்ச்சி கார்த்திகை 1ம் தேதி ஐயப்பனுக்கு மாலையணிதல், திருக்கார்த்திகை தீபம், அண்ணாமலை தீபம், என விசேஷ நாட்களாகதான் இனி இருக்க போகிறது.
குருப்பெயர்ச்சியும் நவம்பர் 13ல் வருகிறது. தங்களின் சுய ஜாதகத்தில் குரு இருக்குமிடம் அறிந்து குருவுக்கு பரிகாரம் செய்து கொள்ள வேண்டுமா என கேட்டு திருச்செந்தூர், ஆலங்குடி, திட்டை போன்ற குரு பரிகார ஸ்தலங்களுக்கு சென்று வருதல நலம் பயக்கும்.