தோஷம் என்பது எப்படி ஏற்படுகிறது என்பதற்கு உதாரணமாக ஒரு கதை. ஒரு தேர்ந்த அருள்வாக்கு ஜோதிடரிடம் சென்ற ஒரு பெண் வாழ்வில் எதிலும் முன்னேற்றமில்லை என புலம்பினாள். திருமணமும் நீண்ட வயதாகியும் நடக்கவில்லை வேலையும் சரியாக இல்லை என்ன செய்வதென்று அந்த அருள்வாக்கு நபரிடம் கேட்டாள்.
அந்த பெண்ணுக்காக ஒரு நிமிடம் யோசித்து தான் வணங்கும் தெய்வத்திடம் மானசீகமாக கேட்ட அருள்வாக்கு நபர் அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட தோஷத்தை உரைக்க தொடங்கினார்.
அந்தபெண் சிறுவயதில் இருந்து தீவிர பக்தி கொண்டவள். அதே நேரத்தில் தீவிர ஜீவஹாருண்யம் பார்ப்பவளும் கூட எந்த விலங்குகளையும் அவள் அன்பாக அணுகுவாள் சிறுவயதில் இருந்தே இந்த சிந்தனை அந்த பெண்ணின் மனதில் உண்டு.
ஒருமுறை அவர்கள் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு கிராமதெய்வத்துக்கு அந்த பெண்ணின் சகோதரன் ஒரு ஆட்டை பலி கொடுக்க ஆயத்தமானான். ஜீவஹாருண்யத்தை தனது உணர்வாக கொண்ட அந்த பெண்ணுக்கு வயது சிறுவயது. அந்த சகோதரனை ஆட்டை பலி கொடுக்க விடாமல் அவள் தடுத்தாள். அவன் எவ்வளவும் தடுத்தும் அந்த ஆட்டை பலி கொடுக்க விடாமல் தடுக்க பார்த்தாள் இருப்பினும் அவன் கேட்கவில்லை இதனால் கோபமடைந்த அந்த பெண் சாமி இருந்தால்தானே நீ ஆட்டை பலி கொடுப்பாய் என்று ஒரு கல்லை எடுத்து அந்த சிறிய பீடத்தில் இருந்த சாமி சிலையை சேதப்படுத்தினாள் .
இதை அந்த பெண்ணுக்கு உணர்த்தினார் அருள்வாக்கு உரைப்பவர். என்னதான் நீங்க ஜீவகாருண்ய நபராக இருந்தாலும் இது போல் ஆத்திரத்தில் உணர்ச்சிவசப்பட்டு சாமி சிலையை சேதப்படுத்தினால் அது உங்களுக்கு தரித்திரத்தை கொடுத்து விடும். கடும் கஷ்டங்களையும் மனவேதனைகளையும் கொடுக்கும் அதனால் உணர்ச்சிவசப்பட்டு ஆத்திரத்தில் இப்படி செய்யக்கூடாது என அறிவுரை சொல்லி அந்த பெண்ணுக்கு உரிய பரிகாரங்களையும் வழிபாடுகளையும் சொல்லி அனுப்பி வைத்தார் அந்த அருள்வாக்கு சித்தர்.
நீங்கள் என்னதான் நல்லவராக இருந்தாலும் இது போல அறியாமல் செய்யும் விசயங்களால் பெரும் சாபம் வரும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். உணர்ச்சிவசப்படுதல் கோபப்படுதல் போன்றவற்றை குறைத்துக்கொள்ளுங்கள்.