மனிதனாய் பிறந்தாலே தினத்துக்கொரு பிரச்சனை வந்துக்கொண்டே இருக்கும். அப்படி பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்களை செய்ய நல்ல பலன் கிடைக்கும்
வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நலக்கோளாறுகள் வந்துக்கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேளையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இப்படி செய்தால் மூன்று நாளில் பலன் தெரியும்.
நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி வருபவர்களுக்கு தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.
மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம், மன அழுத்தம், சோர்வு போன்றவை நாள் முழுதும் இருப்பின் இரவு படுக்கும் பொழுது தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்துக்கொண்டு படுக்கவும். காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம். நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும். அதை குடிக்க கூடாது அதுதான் முக்கியம்.
நவதானியங்களை மஞ்சள் துணியில் முடிந்து கடை / ஆபீஸ் வாசலில் கட்டி,கல்லாவிலும் போட்டு வைக்க வியாபாரம் நஷ்டம் என்பதே இருக்காது.
தற்கொலை எண்ணங்கள் மேலும் வாழ பிடிக்காதது போன்ற உணர்வுகள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் வெள்ளி கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற ஆரம்பிக்கும். ஆண்களுக்கும் செய்யலாம். மூக்குத்தி அணிய வேண்டியதில்லை.
வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடவே சிறிது காகிதப்பூ எடுத்து செல்ல விபத்துக்கள் ஏற்படாது.
காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்.
இடது கை கீழே இருக்கும் படி படுத்துறங்க ஆயுள் விருத்தியாகும்.
வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ அல்லது செயற்கையாக அமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்.
காரணமில்லாமல் இரவில் குழந்தைகள் தூங்காமல் அழுதுக்கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்க, குழந்தை நன்றாக தூங்கும்.
சமையலறையும், படுக்கையறையும் பக்கத்தில் இருக்கும்படி பார்த்துக்கொண்டால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.
துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க வீட்டு வாசலில் மருதாணி கொத்தை தொங்க விட வேண்டும்.
நம்பிக்கையோடு செய்யுங்கள்! நற்பலன்களை பெறலாம்!!