திருஷ்டி ஏவல் பில்லி சூனியங்களை நீக்கும் பவுர்ணமி மிளகாய் யாகம்

By Staff

Published:

காரைக்காலில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது வரிச்சிக்குடி இந்த ஊரில் புகழ்பெற்ற வராஹி கோவில் இப்பகுதியை சேர்ந்த பண்டரிநாதன் என்ற பேராசிரியரால் நிர்வகிக்கப்படுகிறது.

976a51a25d3933c83ba012a0b70f2bf7

இந்த கோவிலில் பவுர்ணமிக்கு செய்யப்படும் மிளகாய் யாகம் மிக பிரசித்தி பெற்றது. இந்த பேராசிரியரே முழு யாகத்தையும் அதர்வண வேத மந்திரங்களுடன் செய்கிறார்.

வராஹி தேவிக்கும், பிரத்யங்கிரா தேவிக்கும் இங்கு யாகம் செய்யப்படுகிறது.

மிக உக்கிரமாக செய்யப்படும் இந்த யாகத்தால் அனைத்து திருஷ்டி தோஷங்களும் விலகுவதாக நம்பிக்கை.

இந்த யாகத்தில் விசேஷம் என்ன என்றால் யாகத்தீயில் ஜ்வாலையில் அம்மனின் உருவம், இறை அம்சம் கொண்ட உருவங்கள் அப்படியே தெரிவது இந்த யாகத்தின் விசேஷம் முன்பு காரைக்கால் நகரிலேயே நடந்து கொண்டிருந்த யாகம் இரண்டு வருடம் முன்பு அருகில் உள்ள கிராமமான வரிச்சிக்குடியில் கோவில் கட்டி அங்கு யாகம் நடந்து வருகிறது.

இந்த யாகம் பற்றி செய்தி வெளியிடாத ஊடகங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு பவுர்ணமிக்கும் நடைபெறும் இந்த யாகம் மாலை 7மணியளவில் நடந்து வருகிறது. யாகத்தில் கலந்து கொண்டு திருஷ்டி பில்லி சூனிய கோளாறுகள் நீங்கி இன்பம் பெறலாம். தொடர்ந்து கலந்து கொள்வது சிறப்பு. இங்கு வெற்றிலையில் நம் கோரிக்கையை எழுதி கொடுத்தால் அது யாக குண்டத்தில் போடப்படுகிறது. அதனால் நம் எழுதி கொடுத்த கோரிக்கை நிறைவேறும் என்பதும் நம்பிக்கை.

நீண்ட நாள் திருமணத்தடை, எதிரிகள் தொல்லை, குழந்தையின்மை போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜாதக ரீதியான தோஷங்கள் அனைத்திற்கும் இங்கு தீர்வு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment