நவக்கிரகங்களில் குரு பகவான் முதன்மையானவர் குரு பலமிழந்தோர் மிகவும் சிரமத்தை சந்தித்து வருவர் முன்னேற்றங்கள் இருக்காது. இது அவ்வப்போது பெயர்ச்சியால் மாறும் ஜாதககாரர்களுக்கே அதிக கஷ்டங்களை கொடுக்கும் எப்படி இருந்தாலும் அடுத்த பெயர்ச்சியின்போது இது மாறக்கூடியதுதான் இருந்தாலும் குறிப்பிட்ட காலம் வரை குருவின் போதிய பலம் இல்லாமல் அவர்கள் நீண்ட துயரங்களை சந்திப்பவர்கள்.
சிலருக்கு பிறந்த ஜாதகத்திலேயே குரு பலமிழந்து விடுவார் கெட்டு விடுவார். அது அவரவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்துதான் பார்க்க முடியும் என்றாலும் அவர்களுக்கு தெரிந்த ஜோதிடர்களிடம் சிலர் காட்டி இருப்பார்கள் அவர்களும் ஆராய்ந்து குரு போதிய பார்வையை இந்த ஜாதகர் மீது செலுத்தாமல் இருக்கிறார் என சில பரிகாரங்களை கூறுவார்.
இப்படி குரு பலமில்லாமல் இருக்கிறோம் என நீங்கள் கேட்டு தெரிந்து கொண்டால் அதற்குறிய கோவில்கள் பல இருக்கிறது தமிழ்நாட்டில் அவற்றில் முக்கியமானவை.
ஆபத்சகாயேஸ்வரர் கோவில்- ஆலங்குடி – தஞ்சாவூர் மாவட்டம்
குரு கோவிந்தவாடி அகரம்- காஞ்சிபுரம்
திருச்செந்தூர் முருகன் கோவில்- இங்கு குருவாக இருந்து போர் புரிய முருகன் வழிகாட்டியதால்
திட்டை- வசிஸ்டேஸ்வர் கோவில்- இங்கு தென்முகம் பார்த்தபடி குரு இருக்கிறார்.
கும்பகோணம்- சுவாமி மலை முருகன் கோவில்
குருவித்துறை பெருமாள் கோவில்- சோழவந்தான்- மதுரை மாவட்டம்
சென்னை- பாடி திருவலிதாயம் கோவில்
இப்படி எண்ணற்ற கோவில்கள் உள்ளது. வியாழன் தோறும் தட்சிணாமூர்த்திக்கு விளக்கு இடுவதன் மூலமும் நவக்கிரகங்களுக்கு விளக்கு இடுவதும், சாய்பாபா, ராகவேந்திரர் போன்ற ஜீவசமாதியாகிய மகான்களையும் குரு ஸ்தானத்தில் வணங்குவதன் மூலம் நன்மைகள் பெருகும்.