கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் அருகில் உள்ளது திருநறையூர் கோவில் இது சிவன் கோவில்தான் ராமநாதர் என்ற பெயரில் சிவனின் திருநாமம் அழைக்கப்படுகிறது.
இங்கு தனி சன்னிதியில் அருள்பாலிப்பவர் மங்கள சனீஸ்வரர் இவர் தனியாக இல்லாமல் தனது இரண்டு மனைவிகளான மந்தா தேவி, ஜேஸ்டா தேவி இருவரோடும் தனது புதல்வர்களான காலத்தை நிர்ணயிக்கும் குளிகன், ஆயுளை நிர்ணயிக்கும் மாந்தி ஆகியோருடன் மனைவி மற்றும் குடும்பத்துடன் மங்களகரமாக காட்சி அளிக்கிறார். இவரை தசரத சக்கரவர்த்தி வணங்கி சென்றதாக சொல்லப்படுகிறது.
இங்குள்ள சனிபகாவனுக்கு பால் அபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறமாக மாறி சனிபகவானின் உண்மையான நிறமான நீலவண்ணத்தைக் காட்டுகிறது.
இக்கோவிலில் அஷ்டம சனி, ஏழரைச்சனி, உள்ளவர்கள் இந்த சனீஸ்வரனை வழிபட்டு நிவாரணம் பெறலாம்.
ஏனென்றால் மகிழ்ச்சியுடன் குடும்பம் குழந்தையுடன் காட்சி அளிக்கும் சனீஸ்வரர் உங்களையும் அப்படியே ஆக்குவார் குடும்ப வாழ்வில் நிம்மதியை தருவார் என்பது நம்பிக்கை. அதனால் இவர் மங்கள சனீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.