குருப்பெயர்ச்சிக்கு புளியறை சென்று வாருங்கள்

அந்தக்காலங்களில் தில்லையில் இருந்த நடராஜர் பெருமானின் சிலையை அந்நியரிடம் இருந்து காப்பாற்றுவதற்காக கைகளில் தூக்கி கொண்டு ஒரு அடியவர் கூட்டம் சென்றது. அந்த அடியவர் கூட்டம் தென்மாவட்டத்தில் இந்த பகுதிக்கு வந்து ஒருபுளிய மரத்தில்…

அந்தக்காலங்களில் தில்லையில் இருந்த நடராஜர் பெருமானின் சிலையை அந்நியரிடம் இருந்து காப்பாற்றுவதற்காக கைகளில் தூக்கி கொண்டு ஒரு அடியவர் கூட்டம் சென்றது. அந்த அடியவர் கூட்டம் தென்மாவட்டத்தில் இந்த பகுதிக்கு வந்து ஒருபுளிய மரத்தில் நடராஜரை ஒளித்து வைத்துவிட்டு சென்றார்கள்.

7a4cea5c793e7889924aa3bf17c7d087

சில நாட்கள் கழித்து தற்செயலாக கண்ணுற்ற ஒருவர் அந்த சிலையை தனியாக எடுத்து பூஜை செய்ய தொடங்கினார். மீண்டும் சிலையை வைத்த இடத்தில் தேட வந்த அடியவர்கள் சிலையை காணாது கலங்கினார்கள். அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது அதன்படி சிலை இருந்த இடத்துக்கு வந்த அடியார்கள் சிலையை எடுத்து சென்றனர்.

ஏற்கனவே அந்த சிலையை வைத்து கோவில் போல வணங்கி வந்த அந்த மனிதர் சிலையை காணாது அழுது புலம்பினார். அப்போது கேட்ட அசரீரியின் அடிப்படையில் பூமியில் இருந்து ஒரு சிவன் சிலை சுயம்புவாக இருந்தது கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு கோவில் எழுப்பபட்டு வழிபாடு நடந்து வருகிறது.

இது சிவன் கோவிலின் சிறப்பு

இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால் தட்சிணாமூர்த்தி தென்முகமாக காட்சியளிப்பது. இங்கு குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஸ்வாமியும் அம்பாளும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்க… வேறெந்த தலத்திலும் இல்லாத விசேஷ அம்சமாக, சிவனாருக்கும் நந்திதேவருக்கும் இடையே தென்முகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீ யோக தட்சிணாமூர்த்தி. நேர்க்கோட்டில் அமர்ந்து அருள்பாலிக்கும் மூவரையும் ஏக காலத்தில் ஒரே இடத்தில் இருந்தபடி தரிசிக்கலாம் என்பது சிறப்பம்சம் .

புளியமரத்தின் அடியில் சிவன் காட்சி தந்ததால் புளியறை என இவ்வூர் அழைக்கப்படுகிறது.

தென்முகமாக குரு ஸ்தானத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தியை வணங்குவது அனைத்து சிறப்புகளையும் வாரி வழங்கும் குருபலம் அதிகரிக்கும் என்பது உண்மை.

வரும் அக்டோபர் 28 வாக்கிய பஞ்சாங்கப்படியும் நவம்பர் 4 திருக்கணித பஞ்சாங்கப்படியும் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன