இந்த கிழங்கு காற்றில் உள்ள ஈரத்தை வாங்கி வாழும் உயிர் சக்தி கொண்டது கொடி போல படர்ந்து இருக்கும் இந்த மூலிகை அபார சக்தி கொண்டது.
கடும் விஷ ஜந்துக்கள் இந்த கருடன் மூலிகை கிழங்கை கண்டாலே பயந்து நடுங்குமாம். கடும் விஷக்கடிகளுக்கு முக்கியமாக தேள், பூரான் கடிகளுக்கு சிறிதளவு இந்த மூலிகை கிழங்கை சாப்பிட்டாலே விஷ முறிவை ஏற்படுத்தும் வலிமை கொண்டது.
முக்கியமாக இந்த கிழங்கை வீட்டின் வாயிலில் கட்டி வைக்க வேண்டும் வீட்டில் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலையும் உள்ளே விடாதாம் இந்த கிழங்கு. கடும் மாந்த்ரீக சக்திகளை யாராவது நமக்கு பிடிக்காதவர் ஏவி இருந்தால் கூட வாசலிலேயே இந்த கிழங்கு அது போல சக்திகளை ஈர்த்து கொள்ளும் வல்லமை இந்த கிழங்குக்கு உண்டு.
மிக அதிகப்படியான மாந்த்ரீக பாதிப்புகள் இதன் சக்திக்கு மீறி ஏதாவது வந்தால் இந்த ஆகாச கருடன் தன்னுயிரை விட்டு நம்மைக் காத்துவிடும். அதாவது இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும். (மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்).