கடுமையான பிரச்சினைகளையும் ஏவல், பில்லி, சூனியம் போன்ற தீராத அவலங்களையும் நீக்கும் ஒரு தெய்வம்தான் சரபேஸ்வரர். பல கோவில்களில் சரபேஸ்வரர் சன்னிதி இருந்தாலும் , தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனத்தில் இருக்கும் சிவன் கோவிலில் அருள் பாலிக்கும் ஆதிசரபேஸ்வரர் மிக புகழ்பெற்றவர் ஆவார்.
இக்கோவில் மூலவர் சிவன் பெயர் கம்பகரேஸ்வரர் இத்தல இறைவனுக்கு திரிபுவனமுடையார், திரிபுவன ஈஸ்வரர், திருபுவன மகாதேவர் என்ற பெயர்களும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தர்மசவர்த்தினி எனும் பெயரில் அம்பாள் இங்கு அருள்பாலிக்கிறாள்.
தான் பக்தன் பிரகாலதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்த நரசிம்மர் இரண்யனை கொன்ற பிறகும் அவர் சாந்தம் ஆகவில்லை இதனால் சிவபெருமான் வீரபத்திரிடம் நரசிம்மர் கோபம் தணிக்க உத்தரவிட, அவரை சாந்தப்படுத்த சரப வடிவத்தில் எட்டுக் கால்கள், சிங்கமுகம், நரிவால் கொண்டிருந்த அந்த தோற்றத்தைக் கொண்டு, நரசிம்மரை சாந்தப்படுத்தினார்.
அதே வடிவத்தில் சரபேஸ்வரர் என்ற பெயரில் கோவில் இங்கு கோவில் கொண்டாராம் இவர், பல்வேறு திருக்கோவில்களில் சரபேஸ்வரர் இருந்தாலும் இந்த கோவிலே பிரதானம்.
இங்கு சரபேஸ்வரரே உற்சவமூர்த்தியாவார்
எதிரிகளால் கடும் தொல்லையடைவோர் ஞாயிற்றுகிழமை ராகு கால நேரத்தில் இவரை வழிபடலாம்.
கடும் மாந்தீரிக பாதிப்புகள், போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிப்பவராக சரபேஸ்வரர் உள்ளார்.
பக்தர்கள் கூட்டம் சரபேஸ்வரரை காண வந்து கொண்டே இருப்பதுகுறிப்பிடத்தக்கது.