நமது ஊரில் ஏழரைச்சனியால் பாதிக்கப்படுவோர் குச்சனூர் சனீஸ்வரரையும், திருநள்ளாறு சனீஸ்வரரையும், திருக்கொள்ளிக்காடு சனீஸ்வரரையும் வழிபட்டு வருகின்றனர். இது தவிர திருக்கொள்ளிக்காடு சனீஸ்வரர், வழுவூர் சனீஸ்வரர் கோவில்கள் என மேலும் சில பிரசித்தி பெற்ற சனீஸ்வரனின் கோவில்களும் தமிழ் நாட்டில் உள்ளன.
இது வடநாட்டில் ஒரு கோவில் உள்ளது அந்த ஊரின் பெயர் சனி சிக்னாப்பூர்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிக்னாபூர் என்ற இடத்தில் இக்கோவில் உள்ளது. சன்னதி பகுதியில், பெண்கள் சென்று வழிபாடு நடத்த இந்த கோவிலில் தடை உள்ளது.
இங்கு கல் வடிவில்தான் சனீஸ்வரர் காட்சியளிக்கிறார். அதுவும் திறந்த வெளியில் இவர் காட்சியளிப்பது மிக சிறப்பான விசயமாகும்.
இந்த கோவில் 400 ஆண்டு பழமையானதாகும்.
இவரை வணங்கினால் ஏழரைச்சனி, ஜென்மச்சனி போன்றவற்றின் தாக்கத்தை குறைத்து நமக்கு நிம்மதியான வாழ்வை இவர் அளிப்பார் என்பது நம்பிக்கை.