ராமேஸ்வரம் செல்பவர்கள் ராமேஸ்வரத்தின் அடையாளமாக விளங்க கூடிய ராமநாதஸ்வாமி கோவிலுக்கு செல்லாமல் இருக்க மாட்டார்கள். இங்கு சென்று விட்டு ராமேஸ்வரத்தில் தரிசிக்க வேண்டிய முக்கிய சிவாலயம் ஒன்று உள்ளது அதுதான் ஜடா மகுடேஸ்வர் கோவில். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் ஆள் அரவமற்ற காட்டுக்குள் இக்கோவில் உள்ளது. பல் சித்தர்கள் ஞானிகள் இன்றளவும் இங்கு வாசம் செய்கின்றனர் என்பது நம்பிக்கை.
இங்கு சென்றால் நம் மனநோய் அகலும் என்பதும், பிரம்மஹத்தி தோஷம் போன்ற தீராத தோஷம் விலகும் என்பதும் நம்பிக்கை.
இங்குள்ள புனித குளத்தில் நீராடினால் 12 மகாமகத்துக்கு நீராடிய பலன் கிடைக்குமாம்.
இது ராமபிரானால் உருவாக்கப்பட்ட தீர்த்தம். இங்கு நீராடித்தான் சுகர் மஹரிஷி எல்லாவித ஞானங்களையும் சித்திகளையும் அடைந்தாராம்.பல யோக சக்திகளை இங்கு நீராடி இங்குள்ள தியானலிங்க மூர்த்திகளை வேண்டுவதால் அடையலாம்.
சீதாவை மீட்டு ராமேஸ்வரத்தில் வந்து தங்கிய ராமன் தனது மணிமுடியில் தங்கிய ரத்த துளிகளை இந்த தீர்த்தத்தில் கழுவி பிரம்மஹத்தி தோஷம் நீங்க பெற்றாராம்.
ராமேஸ்வரம் சென்றால் இக்கோவிலுக்கும் ஒரு விசிட் அடித்து வாருங்கள் அடிக்கடி இங்கு செல்லபஸ் வசதி இருக்காது. ஆட்டோவில், காரில் செல்லலாம்.