இந்த ஊரில் மிக பிரபலமானது நாடி ஜோதிடம். தடுக்கி விழுந்தால் நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள் இந்த ஊரில் அதிகம்.
சில வருடங்களாக இங்கு போலிகள் இந்த தொழிலில் உள்ளதாக குறிப்பிடப்படும் நிலையில் , அக்காலத்தில் இருந்து பாரம்பரியமாக முறையாக பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.
அதன்படி இந்த ஊருக்கு நாடி ஜோதிடத்தை முதன் முதலில் கொண்டு வந்தது இந்த சிவசாமி ஜோதிடரின் வம்சாவளிதான் என கூறப்படுகிறது.
மஹா சிவ நாடி படிக்கும் நாடிஜோதிடர் திரு சிவசாமி, தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் எப்போது விலகும் என மஹா சிவ நாடிப்படி சிவபெருமான உரைத்ததாக சிலவற்றை குறிப்பிடுகிறார்.
அதன்படி சூரியன் தற்போது இருக்கும் நிலையில் இருந்து மாறியவுடன் தான் மாற்றங்கள் உருவாகுமாம். சூரியன் வரும் ஏப்ரல் 14ல்தான் தற்போதைய மீன ராசியை விட்டு மேஷ ராசிக்கு மாறுகிறார். அன்றிலிருந்து மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்கிறார்.
இக்காலம் மிகவும் கடினமான காலம்தான், தவறான குருமார்கள் பெருகிவிட்டதன் காரணமாகவே இத்தகைய விசயங்கள் எல்லாம் நடப்பதாக நாடி வாசித்து இவர் சொல்கிறார்.
இத்தகைய பிரச்சினைக்கு நாம் வணங்க வேண்டியது திருமாலை என சிவபெருமான் மஹாசிவ நாடியில் உரைப்பதாக சொல்கிறார் இவர்.
மேலும் மேற்கத்திய நாடுகளும் கிழக்கு பகுதி நாடுகளும்தான் பாதிக்கப்படும் என இவர், நாடியில் சிவபெருமான் கூறுவதாக இவர் கூறுகிறார். மேலும் குருமார்கள் வழிகாட்டுவார்கள் எனவும் இந்திய நாட்டுக்கு பெரிய ஆபத்து எதுவும் இல்லை இது ஒரு போர் போல உள்ள விசயம்தான் இது எனவும் நாட்டை ஆள்பவர்களை நான் ஆட்கொண்டு விட்டேன் அதனால் பயப்பட தேவையில்லை இந்த கிருமி கட்டுப்படுத்தப்படும் என சிவபெருமான் சித்தர் பாடல் வடிவில் நாடியில் உரைத்துள்ளதை இவர் கொஞ்சம் வாசித்து விளக்குகிறார்.
மேலும் முழுமையாக இந்த வீடியோவை பார்க்க.