கொரோனா கோலம், பெயர் வைப்பது, கேக் வெட்டுவது நல்ல விசயமா

உலகெங்கும் கொரோனா நோய் பாதித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் அதன் தாக்கம் லேசாக அதிகரித்துள்ளது.உலகமே என்ன செய்வதென்று தலையை பிய்த்து கொண்டு உள்ளது. தெருவோர ஆதரவற்றோர் வாயில்லா ஜீவராசிகளில் இருந்து அனைத்தும் கடும் கஷ்டத்துக்கு…

உலகெங்கும் கொரோனா நோய் பாதித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் அதன் தாக்கம் லேசாக அதிகரித்துள்ளது.உலகமே என்ன செய்வதென்று தலையை பிய்த்து கொண்டு உள்ளது. தெருவோர ஆதரவற்றோர் வாயில்லா ஜீவராசிகளில் இருந்து அனைத்தும் கடும் கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.

e6efe9d643fa2b733934b6b4196c0917-1

இந்த நிலையில் இந்த கொரோனா கிருமியின் அடையாளம் போல் உருவகப்படுத்தப்பட்டுள்ள சிம்பலை வைத்து தவறாக சில செயல்கள் செய்யப்படுகிறது. நகரின் மிகப்பெரிய சாலையில் பிரமாண்ட அந்த கிருமியின் உருவம் வரையப்படுகிறது. இரண்டு தினங்களுக்கு முன் ஒரு நபர் அவர் மகன் பிறந்த நாளுக்கு வீட்டிலேயே கேக் கொரோனா வடிவத்தில் செய்திருந்தார்.

ஆந்திராவில் ஒரு மருத்துவர் பிறந்த பிள்ளைகளுக்கு தாயின் வேண்டுகோளுக்கு ஏற்ப பெயர் வைக்கிறேன் என கொரோனா குமார் , கொரோனா குமாரி என பெயர் வைத்துள்ளார்.

இது போல விசயங்களை ஜாலியாக விளையாட்டாக எடுத்துக்கொள்ள கூடாது அது எதிர்மறை விளைவுகளையே தரும். எதிர்மறை பலன்களை தரும்.

யாரோ வைத்த பெயர் இந்த கொரோனா என்ற இந்த பெயர் பத்திரிக்கைகளாலும் டிவிக்களாலும் அதிகம் சொல்லப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நாம் அந்த பெயரை அதிகம் உச்சரிப்பதே அதன் சக்தியை பன்மடங்கு அதிகரிக்க செய்கிறது. ஒரு மந்திரத்தை அதிகம் சொன்னால் அதாவது ஒரு லட்சம் முறை சொன்னால் அது சித்தியாகிறது என்று பொருள். அது போல உலகம் முழுவதும் ஒரு பெயரை அதிகம் உச்சரிப்பதாலும், அதுகூட பரவாயில்லை சில விசயங்களுக்கு சொல்லிதான் ஆக வேண்டி உள்ளது என விட்டு விடலாம்.

ஆனால் அவசியமற்ற கொரோனா கேக், பிள்ளைகளுக்கு அந்த பெயர், நகரத்தில் சாலையில் கொரோனாவின் பெரிய ஓவியம் வரைவது நல்ல விளைவுகளை தராது என்பது உறுதி. அது எதிர்மறை ஆற்றல் உள்ள ஒரு விசயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன