இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டதுதான் பெருமாள் எடுத்த நரசிம்ம அவதாரத்தின் அடிப்படையாகும். அப்படிப்பட்ட பெருமாளை புரட்டாசி சனிக்கிழமையாக இருந்தாலும் 3 நாட்கள் கோவில் நடை சாத்தி இருப்பதால் யாரும் தரிசிக்க இயலவில்லை.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் , ஏரிகாத்த ராமர் கோவில் உள்ளிட்ட பல முக்கிய வைணவ ஆலயங்கள் இன்று அடைக்கப்பட்டுள்ளன.
இதனால் பக்தர்கள் சோர்ந்து விட வேண்டாம். வீட்டில் பெருமாள் படத்தை அலங்கரித்து பூ மாலை, முக்கியமாக துளசி மாலை அணிவித்து சிறிய அளவில் ஏதாவது உணவுபண்டம் நிவேதனம் செய்து பெருமாளுக்குரிய பக்தி பாசுரங்களை பாடி அவரை மனமுருக சிறிது நேரம் தியானித்து வழிபட்டாலே போது பெருமாள் நமக்கு கோவிலில் வழிபட்ட அளவு மிகுந்த மன நிறைவை தருவார்.