பரிகாரம் செய்வது எப்போது செய்யலாம்

By Staff

Published:

529db5371eda83e57a293881d196deab

மனித வாழ்வில் தோஷங்கள் என்பது இன்றியமையாதது ஆகிவிட்டது. சமூக வலைதளங்களில் ஒரு மீம்ஸ் ஒன்று காண நேர்ந்தது. எட்டு எட்டா மனித வாழ்வை பிரித்தாலும் ஒவ்வொரு எட்டுக்குள்ளும் ஒரு ஏழரை இருக்கிறது என காமெடியாக ஒரு மீம்ஸ் பார்க்க நேர்ந்தது. அதுபோல மனித வாழ்வில் பிரச்சினைகள் இன்றியமையாதவை.

சிலருக்கு தோஷ குறைபாடுகளால் பிரச்சினை ஏற்படுகிறது. கர்மா ரீதியாக பிரச்சினைகளால் பலரும் அவதிப்படுகின்றனர் தோஷங்கள் ஏற்படுகிறது. தோஷங்கள் நீங்கி கொள்ள ஜோதிடர்களால் பரிகாரங்கள் சொல்லப்படுகிறது.

எந்த ஒரு கோவில் பரிகாரமோ அல்லது பரிஹார ஹோமமோ எதுவாக இருந்தாலும் தனது நட்சத்திரம் வரும் நாளில் செய்து கொண்டால் பரிகாரத்துக்குரிய பலன் பலமாகி உடனடியாக நாம் நினைத்த காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது.

காலண்டரில் இன்று என்ன நட்சத்திரம் என்று போட்டிருக்கும் உதாரணமாக இன்று ரோகிணி என்றால் ரோகிணி என்று போட்டிருக்கும் அப்படி வரும் நாளில் அந்தந்த நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட ஜோதிட பரிகாரம் செய்து கொள்ளலாம்.

இது சிறப்பை தரும். அது போல ஒவ்வொரு ராசிக்கும் சந்திராஷ்டமம் நாள் வரும் அது போல நாட்களில் பரிகாரம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

Leave a Comment