ஜோதிடத்தை கேலி செய்யலாமா

இன்று நவீன உலகில் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் கடுமையாக உள்ளது. இந்த சமூக வலைதளங்களில் அரசியல், சினிமா, ஆன்மிகம் என தவறு செய்பவர்களை பற்றிய மீம்ஸ் கொடிகட்டி பறக்கிறது. பலவித சுவையான விசயங்களை மீம்ஸ்…

jothidam

இன்று நவீன உலகில் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் கடுமையாக உள்ளது. இந்த சமூக வலைதளங்களில் அரசியல், சினிமா, ஆன்மிகம் என தவறு செய்பவர்களை பற்றிய மீம்ஸ் கொடிகட்டி பறக்கிறது.

பலவித சுவையான விசயங்களை மீம்ஸ் கிரியேட்டர்கள் செய்து வருகின்றனர். அப்படி செய்யும்போது ஆன்மிகம் ஜோதிட ரீதியான சில விசயங்களையும் கடுமையாக மீம்ஸ் மற்றும் ட்ரோல் செய்து வெளியிடுகின்றனர்.

உண்மையில் தவறு செய்யும் ஆன்மிகவாதிகளையும் ஜோதிட நபர்களையும் கிண்டல் செய்வது கூட ஓக்கே. ஆனால் தேவையில்லாமல் ஆன்மிக ரீதியிலான கருத்துக்களையும் ஜோதிடத்தையும் கிண்டல் செய்து வருகின்றனர்.

இது போல் செய்வது மிகவும் தவறு . இந்த விசயத்தில் நாத்திகர்கள் மட்டும் கேலி செய்வதில்லை. ஜாதக ரீதியாக எதுவும் நன்றாக நடக்காத நிலையில் மீம்ஸ் மற்றும் கேலிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

நேற்று கூட குருப்பெயர்ச்சி என்னை உயரத்தில் உட்கார வைத்து விட்டது என மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் வீட்டின் ஓட்டு மேலே உட்கார்ந்து இருந்ததை வைத்து கேலி செய்து இருந்தனர்.

இது போல செய்வது உங்களுக்கே தெரியாமல் பல சாபங்களையும் பாவங்களையும் கிரகங்களிடம் வாங்குகிறீர்கள் என அர்த்தம். அதனால் வாழ்க்கையில் முக்கியமான கட்டங்களில் கிரகங்களால் தடைகள் ஏற்படுகிறது.

இது போல் ஜோதிட ரீதியாக கிரகங்களை கேலி செய்து மீம்ஸ் வெளியிடாதீர்கள். அது நன்மை பயக்கும் விசயம் அல்ல.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன