அமாவாசை விரதம் இருப்பது எப்படி?

அமாவாசை என்பது ஒவ்வொரு மாதத்திலும் சூரியனின் மறைப்பால் நிகழ்வதாகும். அந்த அமாவாசை அன்று நாம் விரதம் இருந்து வழிபாடு செய்தால் இறைவனின் அனுகூலத்தைப் பெற முடியும். அத்தகைய அமாவாசை விரதத்தினை வீட்டிலேயே செய்வது எப்படி…

088b39eb06bc442a6ff65955ad2f655f

அமாவாசை என்பது ஒவ்வொரு மாதத்திலும் சூரியனின் மறைப்பால் நிகழ்வதாகும். அந்த அமாவாசை அன்று நாம் விரதம் இருந்து வழிபாடு செய்தால் இறைவனின் அனுகூலத்தைப் பெற முடியும். அத்தகைய அமாவாசை விரதத்தினை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

அதாவது அமாவாசையன்று வீட்டினை காலையில் எழுந்து சுத்தம் செய்தல் வேண்டும், மேலும் அமாவாசையினை சிலர் கெட்ட சக்திகள் உலவும் நாளாகக் கருதுவர். அதனால் ஒரு குவளையில் உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து அந்த நீரை வீடு முழுவதும் தெளித்துவிட வேண்டும்.

மேலும் பூஜை அறையினை சுத்தம் செய்து, வீட்டில் உள்ள புகைப்படத்தை புதுத் துணியால் துடைக்கவும். அடுத்து மலரால் இறைவனின் புகைப்படத்தை அலங்கரிக்கவும். அடுத்து இறைவன் புகைப்படத்தின் முன் கற்பூரத்தை ஏற்றவும்.

 அடுத்து அமாவாசை நாட்களில் அசைவ உணவுகள், பூண்டு போன்றவற்றினைத் தவிர்க்க வேண்டும். மேலும் காலையில் துவங்கி மாலை அமாவாசை முடியும் வரை விரதம் இருத்தல் வேண்டும். மேலும் நாள் முழுவதும் ஏதும் சாப்பிடாமல் இருந்து, பால், பழம் மற்றும் தண்ணீரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அமாவாசை முடிந்த பின்னர், ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தண்ணீரை பித்தளை செம்பில் வைத்துப் படைக்கவும். மேலும் படைத்த நீரை பூஜை அறை மற்றும் அனைத்து அறைகளிலும் தெளித்தல் வேண்டும்.

மேலும் மஞ்சள் தண்ணீர் தெளித்த பின்னர் சமைத்த உணவினை காக்கைக்கு வைக்க வேண்டும், காக்கை சாப்பிட்ட பின்னர் நம் விரதத்தை முடிக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன