இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ளது ஆதி ஜெகந்நாத பெருமாள் கோவில். பிள்ளைப்பேறு வேண்டி தசரத மஹாராஜா இங்குள்ள ஜெகநாதபெருமாளை வழிபட்டதால் இராமன் பிறந்ததாக ஐதீகம்.
அதனால் இந்த ஷேத்திரம் இராமருக்கு முந்தைய ஷேத்திரம் எனவும் அதாவது இராமாயணம் தோன்றுவதற்கு முன்பே உள்ள ஷேத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது.
இராமர் பிறந்து சீதையை மணமுடித்து இராவணன் சீதையை கடத்தியவுடன் இங்கிருக்கும் சேதுகடலில்தான் பாலம் கட்டி சீதையை மீட்க இராமர் சென்றதாக ஐதீகம்.
இங்குள்ள ஆதி ஜெகநாதர் கோவிலில் வழிபட்டு சென்றால் தீராத திருமணத்தடை குறிப்பாக குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
இங்கு வந்து பெருமாள் சன்னிதியில் குங்கும அர்ச்சனை செய்து தருவார்கள் அதை 48 நாட்கள் தினமும் பொட்டிட்டு வர வேண்டும். நல்ல பலனை எதிர்பார்க்கலாம். உங்களுக்கு சாதகமாக அமைந்தால் இங்கு பாயாசம் நிவேதனம் செய்யவேண்டும். குங்கும அர்ச்சனை செய்துவிட்டு கோவிலில் தரும் பாயாசம் வாங்கி அருந்த வேண்டும்.
காலை நேரத்தில் செய்வதுதான் சிறப்பு