தனுசு ராசியில் 6 கிரக சேர்க்கை இன்று மாலை முதல் நடைபெறுகிறது. இதில் தனுசு ராசியில் சூரியன், வியாழன்,புதன், சுக்கிரன்,கேது,சனி என 6கிரகங்கள் அமர இருக்கிறது.
இன்று மாலை முதல் நடக்கும் இந்த நிகழ்வால் பலரும் மன சஞ்சலம் அடைவர், கடும் பிரச்சினைகள், மனக்குழப்பம் ஏற்படும் என கடந்த சில மாதங்களாக யூ டியூப் ஜோதிடர்கள் அவரவர்கள் ஒரு வீடியோவை போட்டு பதிவேற்றி இருக்கின்றனர்.
இதற்கு முன் பல வருடங்களுக்கு முன் இந்த கிரக நிலை வந்தது எனவும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதனால் பெரிய பாதிப்புகள் இல்லை என்றாலும் இந்த நாட்களில் கேளிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து இறைவழிபாட்டில் கவனம் செலுத்துங்கள்.
எது எப்படியாயினும் கோளறு பதிகம் பாராயணம் செய்வது தொடர்ந்து அடிக்கடி செய்வது கடும் பிரச்சினைகளை குறைக்கும். நாளும் கோளும் என்ன செய்யும் நாதன் உள்ளிருக்கையில் என்ற வகையில் அமைக்கப்பட்ட சக்தி வாய்ந்த பதிகம் இது.
தொடர்ந்து கோளறு பதிகம் பாடினால் கிரகங்களால் 6கிரக சேர்க்கையால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என உறுதியாக கூறலாம்.