புத்தாண்டு ராசி பலன் 2025 – தனுசு ராசிக்காரர்களுக்கு ஆண்டு முழுவதும் பணமழை.. அனுபவிக்க ரெடியா?

By TM Desk

Published:

2025 புத்தாண்டு பிறக்கப்போகிறது. நல்ல வேலை கிடைக்க வேண்டும். திருமணம் நடக்க வேண்டும், குழந்தை பிறக்க வேண்டும், கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று பலரும் இறைவனை வேண்டுவார்கள். 2025ஆம் ஆண்டில் ஆண்டு கோள்களான சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் தனுசு ராசிகளில் பிறந்தவர்களுக்கு குருவின் அருளாலும் ராகு, கேதுவின் புண்ணியத்தாலும் என்ன நன்மைகள் நடைபெறப்போகிறது? நினைத்த காரியம் நிறைவேறுமா என்று பார்க்கலாம்.

தனுசு:

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ஆண்டின் முற்பகுதியில் ராசி அதிபதி குரு ஆறாம் வீட்டிலும், சனிபகவான் மூன்றாம் வீட்டிலும் ராகு நான்காம் வீட்டிலும் கேது பத்தாம் வீட்டிலும் பயணம் செய்வது சிறப்பு. ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுபட்டு இருப்பீர்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டிருந்திருப்பீர்கள் அடுத்ததாக அர்த்தாஷ்டம சனி வரப்போகிறது. ஆனாலும் கவலைப்படத் தேவையில்லை உங்களுக்கு பாதுகாப்பாக துணையாக ராசிநாதன் குருபகவான் இருக்கப்போகிறார். ராகு கேதுவின் பயணமும் 2025ஆம் ஆண்டில் உங்களுக்கு சாதகமாகவே இருக்கப்போகிறது.

அர்த்தாஷ்டம சனி:

சனி பகவான் தனுசு ராசிக்காரர்களுக்கு 2015ஆம் ஆண்டு முதலே அடுக்கடுக்கான சோதனைகளை கொடுத்தார். உடல் நல பாதிப்பு, வேலை இழப்பு, அவமானம் என பல பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள். கடந்த இரண்டரை ஆண்டு காலமாக சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டாலும் இன்னும் சில மாதங்களில் நான்காம் வீடான சுக ஸ்தானத்திற்கு நகரப்போகிறார் சனிபகவான். ஏற்கனவே ஏழரை சனி காலத்திலேயே பாடங்களை கற்ற உங்களுக்கு 2025ஆம் ஆண்டு அர்த்தாஷ்டம சனி காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று தெரிந்திருக்கும்.

இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படாதீர்கள். கையில் இருக்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்தால் அதுவே ஆபத்தாக முடிய வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை. யாரை நம்பியும் ஜாமின் கையெழுத்து போடாதீர்கள் ஏமாந்து போவீர்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். திடீர் மருத்துவ செலவுகள் எட்டிப்பார்க்கும்.

குரு பகவான்

ராசி நாதன் குரு பகவான் மே மாதம் வரைக்கும் உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்வார். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 2,10,12ஆம் வீடுகளின் மீது விழுகிறது. திடீர் பண வருமானம் வந்து திக்குமுக்காட வைக்கும் என்றாலும் சுப விரைய செலவுகளும் கூடவே வரும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும், சம்பள உயர்வும் தேடி வரும். 2025ஆம் ஆண்டு மே மாதம் முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்திற்கு வரப்போகிறார். குருபகவானின் நேரடி பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கும்.

குரு பலன் தேடி வரும்

குரு பகவானின் பார்வை மே மாதம் முதல் உங்கள் ராசிக்கு 3ஆம் இடம் 11ஆம் இடங்களின் மீது விழப்போகிறது. புத்தாண்டில் நீங்கள் எடுக்கும் புது முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். அதே போல செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். அக்டோபர் மாதத்தில் குருபகவான் அதிசாரமாக எட்டாம் வீட்டிற்கு பயணம் செய்தாலும் பயப்பட தேவையில்லை ஏனென்றால் உங்கள் ராசி நாதன் உங்களுக்கு எப்போதும் நன்மைகளையே செய்வார். ஆண்டு முழுவதுமே குருபலன் இருப்பதால் திருமணம் சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.

ராகு கேது பெயர்ச்சி

2025ஆம் ஆண்டின் முற்பகுதியில் ராகு பகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்வதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும். வீடு, நிலம் வாங்கும் கைகூடி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பணம் பல வழிகளிலும் வந்து சேரும் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் மளமளவென நடைபெறும். கேது பகவானும் பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் வேலை தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ஆண்டின் பிற்பகுதியில் 2025ஆம் ஆண்டு மே மாதம் முதல் 3ஆம் இடத்திற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார் ராகு பகவான்.

கேது ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போவதால் தைரியத்துடன் புது தெம்புடன் எதையும் எதிர்கொள்வீர்கள். செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். அம்மாவின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்களின் உடலிலும் உற்சாகம் கூடும். சிலருக்கு வீடு வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆன்மீக பயணம் அற்புத மாற்றங்களை ஏற்படுத்தும்.

பரிகாரம்:

தனுசு ராசிக்காரர்களுக்கு 2025ஆம் ஆண்டு முழுவதும் உங்களுக்கு பண மழை பொழியப்போகிறது. குரு பகவானும், ராகு பகவானும் அள்ளித்தரப்போகின்றனர். அதே நேரத்தில் உங்களுக்கு செக் வைக்கும் வகையில் சனிபகவான் நான்காம் வீட்டில் அர்த்தாஷ்டம சனியாக இருப்பதால் அதிக அளவில் ஆட்டம் போட வேண்டாம். பணத்தை வீணாக செலவு செய்தால் கடன் வாங்கி கஷ்டப்பட வேண்டும் எனவே கவனம் தேவை. சனிக்கிழமை சனி ஹோரை காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்பட பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.