2025ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் சனி பகவான் மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மீன ராசியில் உள்ள ராகு உடன் இணைந்து சில மாதங்கள் பயணம் செய்வார். மீன ராசியில் பயணம் செய்யும் சனியின் பார்வை ரிஷப ராசியில் உள்ள குருவின் மீதும் விழப்போகிறது. மே மாத மத்தியில் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகின்றார். மீன ராசியில் உள்ள ராகு பகவான் கும்ப ராசிக்கும் கன்னி ராசியில் உள்ள கேது பகவான் சிம்ம ராசிக்கும் மே மாதத்தில் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றனர். இந்த கிரகங்களின் சேர்க்கை பார்வையால் என்னென்ன யோகங்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சந்திர கிரகணங்கள்:
பிறக்கப்போகும் புத்தாண்டில் 2 சூரிய கிரகணங்களும், 2 சந்திர கிரகணங்களும் நிகழ உள்ளன. குரோதி வருடம் மாசி மாதம் 30ஆம் தேதியன்று 14/03/2025 வெள்ளிக்கிழமை காலை 10.39 மணி முதல் பகல் 02.18 மணி வரை கேது கிரகஸ்த முழு சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாது.
விசுவாவாசு வருடம் ஆவணி மாதம் 22ஆம் தேதி 07/09/2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 09.56 மணி முதல் இரவு 01.26 மணி வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் நிகழும் ராகு கிரகஸ்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும்.
சூரிய கிரகணங்கள்:
குரோதி வருடம், பங்குனி மாதம் 15ஆம் தேதி 29/03/2025 சனிக்கிழமையன்று சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இது இந்திய நேரப்படி பகல் 2.20 மணி முதல் மாலை 06.13 மணி வரைக்கும் நீடிக்கிறது. ராகு கிரகஸ்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும்.
விசுவாவாசு வருடம் புரட்டாசி மாதம் 05ஆம் தேதி 21/09/2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 10.59 மணி முதல் இரவு 03.29 மணி வரை உத்திரம் நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரகஸ்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாது.
குருவின் பயணத்தால் மக்களுக்கு பாதிப்பு:
2025ஆம் ஆண்டில் குரு பகவான் ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய ராசிகளில் பயணம் செய்வதால் உலகத்தில் 3ல் ஒரு பங்கு மனிதர்கள் பாதிப்படைவார்கள். இயற்கை பேரழிவினாலும் தொற்று நோயினாலும் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். உலக அளவில் மரணங்களும் அதிகரிக்கும். நோய் பாதிப்புகள், மரண பயங்கள் நீங்குவதற்கு குல தெய்வ வழிபாடு, கால பைரவர் வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். சிவ ஆலயங்களுக்கு பச்சரிசி, வெல்லம், நல்லெண்ணெய், நெய் போன்றவைகளை தானமாக வாங்கித் தரலாம்.
உலகில் நிகழப்போகும் மாற்றங்கள்:
2025 ஆம் ஆண்டில் உலக அளவில் போர் அச்சுறுத்தல்கள் அதிகம் ஏற்படும். புது வைரஸ் உருவாகி உலக மக்களை அச்சுறுத்தும். கண்கள், கால்களில் நீர் தொடர்புடைய நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது. போர் பதற்றத்தை தணிக்க இந்தியா முதலில் பேச்சுவார்த்தையை தொடங்கும். உலக நாடுகளிடையே இந்தியாவின் மதிப்பு உயரும்.
பொருளாதார நிலை:
இந்தியாவின் பொருளாதார நிலை சிறப்படையும். தொழில் துறை விருத்தியடையும். மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறை மந்தநிலை அடையும். திருமணங்கள் அதிகம் நடைபெற்றாலும் மக்களிடையே குழந்தை பிறப்பு விகிதம் குறையும். பண வருமானத்தில் இருந்த தடைகள் நீங்கும்.
மழை, விவசாயம்:
பருவமழை அபரிமிதமாக இருக்கும். விலைச்சல் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தங்கம், வெள்ளியின் விலை சீராக உயரும். பங்குச்சந்தையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். முதலீட்டாளர்களுக்கு ஆண்டின் பிற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். நாட்டின் தொழில் துறை வளர்ச்சி அதிகரித்தாலும் கடன்சுமையும் அதிகரிக்கும். மக்களிடையே சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். வருமானமும் அதிகரிக்கும். ஆலய வழிபாடு அவசியம் யாகங்கள் செய்வது நல்லது.
உங்கள் ராசிக்கு 2025 எப்படி இருக்கும் என்று பார்க்க:
https://tamilminutes.com/tag/puthandu-rasi-palan-2025/
