2018ல் உருவாக இருந்த கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு…. இந்த படமே வேண்டாம்…. அனிமேஷன் புகைப்படத்தால் ஷாக்கான தயாரிப்பாளர்….!!

புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவர் ஜெயலலிதா ஆகியோர் இணைந்து நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் என்று கூறலாம். இந்த நிலையில் 38 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் அனிமேஷனில் நடிக்கும் படம் 2018 ஆம் ஆண்டு உருவாக இருந்தது.

எம்ஜிஆர் நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் அடுத்த பாகமாக எடுக்க இருந்த ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்ற படத்தை அவர் முதலமைச்சர் ஆகிவிட்டதால் எடுக்க முடியாமல் போனது.

ரஷ்ய மொழி படத்தில் நடித்த முதல் தென் இந்திய நாயகி.. ஆனா எம்ஜிஆர் கூட நடிச்ச படம் இவ்ளோ தான்!

இந்த நிலையில் எம்ஜிஆருக்கு நெருக்கமாக இருந்த நகைச்சுவை நடிகர் ஐசரி வேலன் அவர்களின் மகன் ஐசரி கணேஷ் தனது தந்தை மற்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவாக இந்த படத்தை தயாரிக்க இருந்தார்.

அனிமேஷன் மூலமாக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை இந்த படத்தில் நடிக்க வைக்கலாம் என்று நினைத்திருந்தார் அதேபோன்று இந்த படத்தில் மறைந்த நாகேஷ், நம்பியார், தேங்காய் சீனிவாசன் ஆகியோர்களும் முக்கிய வேடங்களில் அனிமேஷனில் நடிக்க இருந்தனர்.

10 குழந்தைகளுடன் பெரிய குடும்பம்.. எம்ஜிஆருகு குருவாக இருந்தவர்.. எம்ஜிஆர் சகோதரர் எம்ஜி சக்கரபாணியின் திரை வாழ்க்கை!

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம் ஜி ஆர் விஞ்ஞானி ராஜூ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதே கதாபாத்திரத்தின் பெயர் தான் இந்த படத்திலும் இருக்க வேண்டும் என்பதற்காக தான் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என படத்தின் பெயரை வைத்துள்ளனர்.

இந்த படப்பிடிப்பின் தொடக்க விழா பூஜை எல்லாம் சிறப்பாகத்தான் நடந்தது. அதேபோன்று ட்ரெய்லரும் வெளியானது. ஆனால் இந்த படத்தை ஐசரி கணேஷ் திடீரென கைவிட்டு விட்டார். அனிமேஷனில் எம்ஜிஆரின் புகைப்படத்தை தயார் செய்த போது அது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்துள்ளது.

கங்கை அமரன் பார்த்த வேலை.. கூப்பிட்டு எச்சரித்த எம்ஜிஆர்.. எல்லாத்துக்கும் அந்த ஒரு லைன் தான் காரணமா?

எம்ஜிஆர் போன்ற இல்லாமல் இருந்துள்ளது. இதனால் இந்த முக அமைப்புடன் படத்தை எடுத்தால் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு கேலி கிண்டலுக்கு ஆளாக கூடும் என்று படத்தை கைவிட்டு உள்ளார். எம்ஜிஆரின் அனிமேஷன் புகைப்படம் இணையத்தில் வெளியானதால் அதனைப் பார்த்த ரசிகர்கள் இதுவா எம்ஜிஆர் என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Published by
Staff

Recent Posts