10 குழந்தைகளுடன் பெரிய குடும்பம்.. எம்ஜிஆருகு குருவாக இருந்தவர்.. எம்ஜிஆர் சகோதரர் எம்ஜி சக்கரபாணியின் திரை வாழ்க்கை!

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் சகோதரர் எம் ஜி சக்கரபாணி, எம்ஜிஆருக்கு தந்தையாகவும் குருவாகவும் இருந்தார். அதே போன்று எம்ஜிஆரின் திரை உலக முன்னேற்றத்தில், அரசியல் முன்னேற்றத்தில்  பின்புலமாக இருந்தார். அப்படிப்பட்ட எம்ஜி சக்கரபாணியின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைப்படங்களை தான் தற்போது பார்க்க போகிறோம்.

கடந்த 1936 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடித்த இரு சகோதரர்கள் என்ற திரைப்படத்தில் தான் எம்ஜி சக்கரபாணி நடிகராக அறிமுகமானார். எல்லிஸ் டங்கன் இயக்கத்தில் உருவான இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது

முதல் படத்திலேயே தனது நடிப்பு முத்திரையை பதித்த எம்.ஜி சக்கரபாணி அதன் பிறகு எம்.ஜி.ஆர் நடித்த மாயா மச்சந்திரா என்கிற திரைப்படத்தில் நடித்தார். பின்னர் வடலூர் வள்ளலார் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ஜோதி என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.

அதன் பிறகு அவர் பெரும்பாலும் எம்ஜிஆர் உடன் நடித்தார். ஒரு சில படங்கள் எம்கே தியாகராஜ பாகவதருடன் நடித்தார். ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, அபிமன்யு, ஸ்ரீ முருகன், ராஜமுக்தி, பொன்முடி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

mg chakrapani2

நம்பியார் ஹீரோவாக நடித்த திகம்பர சாமியார் என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த எம் ஜி சக்கரபாணி அதன்பின் தொடர்ச்சியாக எம் ஜி ஆர் படங்களில் மட்டுமே நடித்தார். மருதநாட்டு இளவரசி,  என் தங்கை, மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், ராஜராஜன், நாடோடி மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்

அதன் பிறகு ராஜா தேசிங்கு என்ற திரைப்படத்தில் நவாப் ஆற்காடு வேதத்தில் நடித்த அவர் மன்னாதி மன்னன் என்ற படத்தில் கரிகால் சோழனாக நடித்தார்.  எம்ஜிஆர் நடிப்பில் உருவான மிகப்பெரிய வெற்றி திரைப்படமான அரசகட்டளை என்ற திரைப்படத்தை எம்.ஜி. சக்கரபாணி தான் இயக்கி இருந்தார். இதனை அடுத்து எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த நம் நாடு என்ற திரைப்படத்தை அவர் தயாரித்தார்.  இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதன் பிறகு  இதயவீணை திரைப்படத்தில் எம்ஜிஆரின் தந்தையாக நடித்த அவர், நேற்று இன்று நாளை என்ற படத்தில் நடித்தார். எம் ஜி சக்கரபாணி நடித்த கடைசி திரைப்படம் நாளை நமதே. இந்த படத்தில் அவர்  சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு அவர்  வயது காரணமாக திரைப்படங்களில் நடிக்கவில்லை.

கடந்த 1986 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக  எம்ஜி சக்கரபாணி காலமானார். எம்ஜி சக்கரபாணி கடைசி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்த போது எம்ஜிஆர் தான் அருகில் இருந்து பார்த்துக் கொண்டார்.

mg chakrapani3

ஒரு அண்ணனாக மட்டுமின்றி ஒரு தந்தையாகவும், வழிகாட்டியாகவும், குருவாகவும் இருந்ததால் எம் ஜி சக்கரபாணி இழப்பை எம்ஜிஆரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. எம்.ஜி சக்கரபாணியின் மறைவுக்கு கட்சி பேதம் இன்றி அனைத்து கட்சி தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

அன்றைய காங்கிரஸ் தலைவராக இருந்த கருப்பையா மூப்பனார் கடைசி வரை எம்.ஜி.ஆர் அருகிலேயே இருந்த ஆறுதல் கூறினார். எம்ஜி சக்கரபாணியின் உடலுக்கு வாய்க்கரிசி போடும் போது எம்ஜிஆர் கை நடுங்கியது என்ற நிலையில் கருப்பையா மூப்பனார் தான் அவருடைய கையை பிடித்து வாய்க்கரிசி போட வைத்தார் என்று கூறப்படுவதுண்டு

எம்.ஜி சக்கரபாணியின் மறைவிற்கு பிறகு அவரது குடும்பத்தினரை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் எம்ஜிஆர். அவரது  ஏழு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் என பத்து குழந்தைகளை எம்ஜிஆர் தான் நல்ல நிலைக்கு கொண்டு வந்தார் என்று கூறப்படுவதுண்டு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...