பொழுதுபோக்கு

எங்கெல்லாம் வாய்ப்பின் கதவுகள் அடைக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் புதிய வாசல் திறக்கின்றன… ஓடிடி ப்ளஸ் அறிமுக நிகழ்ச்சியில் சீனு ராமசாமி பேச்சு…

எதார்த்தமனான மனிதர்களின் வாழ்வியல் கதைகளை பிரதிபலிக்கும் இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. நடிகர் விஜய் சேதுபதியை நாயகனாக அறிமுகம் செய்தவர் மற்றும் இவரை விஜய் சேதுபதி தனது குரு என்று கூறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

2007 ஆம் ஆண்டு ‘கூடல் நகர்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இத்திரைப்படத்தில் பரத் இரட்டை வேடங்களிலும், சந்தியா மற்றும் பாவனா ஆகியோர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அடுத்ததாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கி விஜய் சேதுபதியை நாயகனாக அறிமுகம் செய்து 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தென்மேற்கு பருவக்காற்று’. தாய் மற்றும் மகன் உறவை அடிப்படையாக வைத்து இயக்கிய இத்திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது. சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை சீனு ராமசாமி இத்திரைப்படத்தின் மூலம் வென்றார்.

அதைத் தொடர்ந்து ‘நீர் பறவை’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்மதுரை’, ‘கண்ணே கலைமானே’, ‘மாமனிதன்’ ஆகிய படங்களை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். இவர் தேர்ந்தெடுத்து இயக்கும் கதைகள் தனித்துவமாகவும் பார்வையாளர்கள் மனதில் நிற்கும்படியாகவும் இருக்கும்.

இந்நிலையில், தற்போது ஓடிடி ப்ளஸ் என்ற வலைதளத்தின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மேடையில் பேசினார் சீனு ராமசாமி. அவர் கூறியது என்னவென்றால், தற்போது உள்ள சூழலில் ஸ்டார் ஹீரோக்களின் படங்களைத் தான் தியேட்டர் உரிமையாளர்கள் விரும்புகின்றனர். சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள், பெண்களை மையமாக வைத்து எடுக்கும் படங்கள் ஆகியவற்றிற்கு அவ்வளவு எளிதாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

எங்கெல்லாம் வாய்ப்பின் கதவுகள் அடைக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் புதிய வாசல் திறக்கின்றன. அப்படித்தான் இந்த ஓடிடி பிளஸ் அறிமுகத்தை நான் காண்கிறேன். இதன் மூலம் பல புதிய வாய்ப்புகளுக்கு ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று பேசியுள்ளார் சீனு ராமசாமி.

Published by
Meena

Recent Posts