கங்கை அமரன் பார்த்த வேலை.. கூப்பிட்டு எச்சரித்த எம்ஜிஆர்.. எல்லாத்துக்கும் அந்த ஒரு லைன் தான் காரணமா?

தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக திகழ்ந்ததுடன் அரசியலில் நுழைந்து முதலமைச்சராக தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர்.

ஆரம்ப காலகட்டத்தில், வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த எம்ஜிஆர், தமிழ் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபத்திராதிங்களில் நடிக்கத் தொடங்கினார். மெல்ல மெல்ல முன்னணி நடிகராகவும் மாறிய அவர், தமிழ் மக்களின் ஃபேவரைட் ஹீரோவாகவும் பல ஆண்டுகள் தடம் பதித்திருந்தார்.

மக்களுக்காக போராடும் கதைக்களம் கொண்ட எக்கச்சக்க படங்களில் நடித்துள்ள எம்ஜிஆரின் நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், இதயக்கனி, ஊருக்கு உழைப்பவன் என பல படங்கள், இன்றளவிலும் மக்களின் மனம் கவர்ந்த படைப்புகளாக உள்ளன. திரைப்படத்தில் கிடைத்த பிரபலம் மூலமாக அரசியலுக்குள் நுழைந்தார் எம்ஜிஆர்.

வெறுமென வாய் மூலம் வாக்குறுதிகளை மட்டுமே கொடுக்காமல், அவை அனைத்தையும் முதலமைச்சராக இருந்து நிறைவேற்றி தமிழ் மக்களின் உற்ற நண்பனாக இருந்து ஆட்சி புரிந்தார். எம்ஜிஆருக்கு பின் ஏராளமான முதலமைச்சர்களையும், அரசியல்வாதிகளையும் தமிழக மக்கள் கண்டிருந்தாலும் அவரை போல இனி ஒருவர் வர முடியாது என்றும், எம்ஜிஆர் ஒருவர் தான் என்றும் மனதார குறிப்பிடவும் செய்கிறார்கள்.

அப்படி இருக்கையில், அவ்வப்போது எம்ஜிஆரின் சினிமா அல்லது அரசியல் வாழ்க்கை குறித்த செய்திகள், சமூக வலைத்தளங்களில் வலம் வருவதை நாம் கவனத்திருப்போம். அந்த வகையில், இயக்குனர் மற்றும் இசை அமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட கங்கை அமரன் சொன்ன ஒரு தகவல் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

கரகாட்டக்காரன், செண்பகமே செண்பகமே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை இயக்கி உள்ளவர் கங்கை அமரன். இது போக இசையமைப்பாளராகவும், பாடலாசிரியாராகவும், பாடகராகவும் பல படைப்புகளை அவர் கொடுத்துள்ளார். அப்படி இருக்கையில், தான் எழுதிய ஒரு பாடலுக்காக எம்ஜிஆரிடம் வந்த மிரட்டல் குறித்து கங்கை அமரன் மனம் திறந்துள்ளார்.

கங்கை அமரன் இயக்கிய ‘கோழி கூவுது’ என்னும் திரைப்படத்தில் “அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே, நம்ம ஊரு நல்ல ஊரு, இப்போ ரொம்ப கெட்டு போச்சுணே” என்ற பாடலில் முதல் வரி வரும். இதனை கங்கை அமரன் எழுதி இருப்பார். இந்த வரிகளை பயன்படுத்தி, திருச்செந்தூர் இடைத்தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் அங்கே எம்ஜிஆர் ஆட்சி சரியில்லை என்பது போல குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டி விட்டனர்.

இதனைக் கவனித்த எம்ஜிஆர், சற்று ஆவேசமானதாக கூறப்படுகிறது. உடனடியாக கங்கை அமரனை அழைத்து வர செய்த எம்ஜிஆர், அவரிடம் இந்த வரிகள் பற்றி சற்று கோபத்துடன் கருத்துக்களை கேட்டதாகவும் கூறப்படுகிறது. படத்தில் வரும் காட்சிக்கேற்ப தான் அந்த வரிகளை குறிப்பிட்டதாகவும், மற்றபடி அரசியல் நோக்கத்துடன் எழுதவில்லை என்றும் கங்கை அமரன் விளக்கம் கொடுத்தார். “ஏதோ சொந்தக்கார பயலா போய்ட்டே, போ” எனக்கூறி எம்ஜிஆர் தன்னை அனுப்பியதாகவும் கங்கை அமரன் குறிப்பிட்டிருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...