சிலிர்க்க வைக்கும் வெண்கலக் குரலரசி.. லேடி சீர்காழி கோவிந்தராஜன்.. அடேங்கப்பா இதெல்லாம் இவர் பாடியதா?

சினிமாவில் எத்தனை பாடகர்கள் வந்தாலும் சரி.. ஒரு சிலரின் குரலை நாம் கேட்டவுடனே கண்டுபிடித்து விடுவோம். இன்றும் தினமும் கோவில்களில் இவரது குரலைக் கேட்காத ஆன்மீக பக்தர்கள் கிடையாது. அவர்தான் தமிழ் சினிமாவின் வெண்கலக் குரல் நாயகன் என்று போற்றப்படும் சீர்காழி கோவிந்தராஜன். கணீர் குரலில் இவரது பாடலைக் கேட்டவுடன் எளிதில் இவர்தான் பாடியது என்று அடையாளம் கண்டு கொள்ளலாம்.

இதேபோன்று பெண்பாடகர்களிலும் லேடி சீர்காழி கோவிந்தராஜன் என்று அழைக்கப்படும் பாடகர்தான் கோவை கமலா. சீர்காழி கோவிந்தராஜன், டி.எம். சௌந்திரராஜன் போன்றோர் போல முருகன் மீது இவர் பாடிய பாடல்கள் ஏராளம். சீர்காழியைப் போல கணீர் குரலில் பாடும் தனித்துவ குரலுக்குச் சொந்தக்காரர்.

இப்படி தனது 7 வயதிலிருந்து ஆன்மீகப் பாடல்களைப் மட்டுமே பாடி வந்த கோவை கமலா எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்தில் ஆரம்பித்து ஹாரிஸ் ஜெயராஜ் வரை பல இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ளார். எனினும் இவரை தமிழ் சினிமாவில் அடையாளம் காட்டியது இசைஞானி இளையராஜாதான்.

இயக்குநர் பாலா, நடிகர் விக்ரம் ஆகியோருக்கு சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த சேது படத்தில் வரும் ஓப்பனிங் பாடலான “கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா..” என்ற பாடலைப் பாடி தனது முதல் திரையிசைப் பாட்டிலேயே ரசிகர்களை தியேட்டரில் எழுந்து துள்ளளாட்டம் போடச் செய்தவர்.

சினிமாவிற்காக 75,000 சம்பளத்தை விட்ட நடிகர்.. 3500 to லட்சங்களைக் தொட்ட பயணம்

அதனைத் தொடர்ந்து சிம்பு நடித்த கோவில் திரைப்படத்தில் நாட்டுப்புறப் பாடகி பரவை முனியம்மா பாடி, ஆடி வரும் பாடலான “காதல் பண்ண திமிரு இருக்கா.. கையைப் பிடிக்க தெம்பு இருக்கா..” என்ற பாடலை வடிவேலுவுடன் இணைந்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அசத்தலாகப் பாடியிருப்பார்.

மேலும் வடிவேலுடன் அவர் முதன்முதலில் ஹீரோவாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் அந்தப்புரம் மகிழ வரும் சுந்தரரே போற்றி போற்றி.. என்று பல்லவி தொடங்கி ஆரம்பிக்கும் ஆடி வா.. பாடிவா என்ற பாடலையும் சபேஷ்-முரளி இசையில் பாடியிருப்பார் கோவை கமலா. மேலும் நடிகை ஸ்ருதிஹாசன், இயக்குநர் சுதா கொங்கரா போன்றோர் இவரின் மாணவிகள் ஆவர்.

Published by
John

Recent Posts