எனக்கு பிடிச்சதுல பெஸ்ட் டைரக்டர் இவர்தான்… யோகிபாபு பேச்சு…

நகைச்சுவை நடிகர் யோகிபாபு, சின்னத்திரை விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 2009 ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் நடித்த ‘யோகி’ திரைப்படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தான் நடித்த முதல் திரைப்படத்தின் பெயரையே அடைமொழியாக தான் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டதால் யோகி பாபு என்று அழைக்கப்படுகிறார்.

அதைத் தொடர்ந்து பையா (2010), கலகலப்பு (2012) ஆகிய திரைப்படங்களில் தோன்றினார். பட்டத்து யானை ( 2013) படத்தில் தான் நீண்ட நகைச்சுவை கதாபாத்திரத்தில் தோன்றினார் யோகிபாபு. அதே நேரத்தில் இந்தியில் ஷாருக்கான் உடன் இணைந்து ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

பின்னர் காக்கா முட்டை (2015), கிருமி (2015) கோலமாவு கோகிலா (2018), பரியேறும் பெருமாள் ( 2018) போன்ற திரைப்படங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி மக்களால் நகைச்சுவை நடிகராக அங்கீகரிக்கப்பட்டார்

அதற்குப் பின்பு கூர்கா (2019), மண்டேலா (2021), பொம்மை நாயகி (2023), யானை முகத்தான் (2023) போன்ற திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார் யோகிபாபு. குறிப்பாக ‘மண்டேலா’ திரைப்படத்தில் யோகி பாபுவின் நடிப்பு அனைவரையும் கண் கலங்க வைத்தது.

இந்நிலையில், தற்போது நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட யோகிபாபு அவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. உங்களுக்கு பிடித்த டைரக்டர் யார் என்ற கேள்விக்கு யோகிபாபு, எனக்கு நிறைய டைரக்டர்களை பிடிக்கும் அதில் பெஸ்டா கே. எஸ். ரவிக்குமார் சார் பிடிக்கும். முன்னாடி ஷூட்டிங் அப்போ பிள்ளைங்களை பார்க்க முடியலன்னு கே. எஸ். ரவிக்குமார் சார் சொல்லுவார், இப்போ அதே இடத்தில நான் இருக்கேன், ஷூட்டிங்ன்னு போறதால பிள்ளைங்களை பார்க்க முடியல என்று பகிர்ந்துள்ளார் யோகிபாபு.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...