படம் டைரக்க்ஷன் பண்றதுக்கு இதெல்லாம் செஞ்சிட்டு இருக்கேன்… பிரதீப் ஆண்டனி பகிர்வு…

நடிகர் கவினின் நெருங்கிய நண்பரான பிரதீப் ஆண்டனி, திரைக்கதை எழுதுதல், கதை இயக்கம் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர். விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 3 இல் கவின் போட்டியாளராக பங்கேற்ற பொழுது குடும்ப சுற்றில் கவினுக்கு நண்பர் என்ற முறையில் பிரதீப் ஆண்டனி நிகழ்ச்சிக்கு வந்து கவினை கன்னத்தில் அறைந்தது மூலம் பிரபலமானவர்.

பின்னர் 2016 ஆம் ஆண்டு அதிதி பாலன் கதாநாயகியாக நடித்த ‘அருவி’ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்பு 2019 ஆம் ஆண்டு ‘வாழ்’ என்ற திரைப்படத்தின் வாயிலாக பிரதீப் ஆண்டனி நடிகராக ஆனார்.

அடுத்ததாக 2023 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 7 இல் போட்டியாளராக கலந்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார் பிரதீப் ஆண்டனி. சுயநலமற்ற பேசினாலும், குழந்தை முக சிரிப்பினாலும் மக்களைக் கவர்ந்தார். சக போட்டியாளர்களால் வெளியேற்றப்பட்ட போதிலும் சிரித்துக்கொன்டே அதை ஏற்றுக்கொண்டவர்.

தற்போது ரேடியோ ரூம் என்ற செயலியின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரதீப் ஆண்டனியிடம் எப்போது படம் இயக்குறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரதீப் ஆண்டனி, நிறைய கதைகளை வச்சிருக்கேன், படம் இயக்குவது எடுத்தோம், கவுத்தோம் என்று பண்ணிவிட முடியாது, நான் எடுக்குற படம் வியாபாரம் ரீதியாகவும் நல்ல போகணும், அதற்காக பல ப்ரொடியூசர்களிடம் பேசிட்டு இருக்கேன், ஒரு படம் பண்ணினாலும் நல்ல பண்ணனும், அதற்காக ஓடிட்டு இருக்கேன் என்று கூறியுள்ளார் பிரதீப் ஆண்டனி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...